கடலுணவுகளை ஒன் – லைன் மூலம் பெற்றுக் கொள்வதற்கு பொறிமுறை – கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அங்குரார்ப்பணம்!

Monday, August 15th, 2022

பொது மக்கள் தமக்குத் தேவையான கடலுணவுகளை ஒன் – லைன் மூலம் பெற்றுக் கொள்வதற்கான பொறிமுறை ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

குறித்த சேவை இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் பம்பலப்பிட்டி மீன் விற்பனை நிலையத்தில் இன்று சம்பிரதாயபூர்வமாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.

அதனடிப்படையில் இன்று தொடக்கம் ‘பிக் மீீ’ சேவை ஊடாக இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனத்தின் விற்பனை நிலையங்களில் இருந்து தேவையான கடலுணவுகளை மக்கள் பெற்றுக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. – 15.08.2022

Related posts: