கடலில் காவியமான தோழர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உணர்வஞ்சலி மரியாதை!

Thursday, June 7th, 2018

செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் சக தோழர்களும் படகேறி இந்தியா செல்லும் பயணத்தின் போது உன்னத தோழர்கள் எழுவர் கடலில் காவிமான தினம் இன்றாகும். கடலில் காவியமான தோழர்களை நினைவுகூருவதுடன் அவர்களுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலிமரியாதை செலுத்துகின்றது.

ஈ.பி.ஆர்.எல்.எவ் இயக்கத்தின் ஸ்தாபகர்களில் ஒருவராகவும், அதன் மத்திய குழு மற்றும் அரசியல் பீட உறுப்பினராகவும் பிரதம தளபதியாகவும் இருந்த டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அன்றைய காலப்பகுதியில் இயக்கத்திற்கு உள்ளேயும், போராட்ட இயக்கங்களுக்கு இடையேயும் உருவாகிக் காணப்பட்ட முரண்பாடுகளை பேசித்தீர்க்கும் நோக்கோடு 07.06.1986 இல் சக தோழர்கள் 19 பேருடன் இந்தியா நோக்கி பயணமாகியிருந்தார்.

கடற்படையினரின் பாதுகாப்பில் இருந்த இலங்கைக் கடற்பரப்பில் ஏற்பட்ட அந்த விபத்தின் போது தோழர் சுகிர்தன், தோழர் ஞானம், தோழர் நாகராஜா, தோழர் செண்பகன், தோழர் இமாம்,தோழர் எட்வேட், தோழர் அசோக் ஆகிய ஏழு தோழர்கள் தமது இன்னுயிர்களை கடலில் ஆகுதி ஆக்கிக்கொண்டனர்.

செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் மற்றும் தோழர்களான ஜீவன், கேதீஸ், உதயன், விசுவா, நந்தன், லிங்கேஸ், றமணன், கலீல், காமினி மற்றும் அன்ரன் ஆகியோர் மரணத்தின் ஆபத்தில் இருந்து உயிர் மீண்டு கொண்டனர்.

சக தோழர்களின் விருப்பங்களை ஏற்று அர்பணிப்பு நிறைந்த துணிச்சலுடன் கரம் கொடுத்த தோழர் கேதீஸ் அவர்களின் துணையோடும் தனது இடைவிடாத தன்னம்பிகையுடனும் நீந்திக்கரை சேர்ந்து அன்று மறு பிறப்பெடுத்திருந்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்.

உயிர் ஆபத்தில் இருந்த ஏனைய தோழர்கள் இந்திய படகு ஒன்றின் உதவி மூலம் உயிர் பாதுக்கப்ப்பட்டனர்.

இறந்த தோழர்கள் எழுவரையும் நெஞ்சில் நினைவேந்தி  உணர்வெழுச்சியுடன் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் தோழர்கள் அஞ்சலி மரியாதை செலுத்துகின்றோம்.

Related posts:

தேசியப் பிரச்சினை தொடர்பில் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் நிறையவே உண்டு - டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!
அனைத்து ஆட்சியாளர்களின் காலத்திலும் எமது மக்கள் காணாமலாக்கப்பட்டுள்ளனர் – நர்டாளுமன்றில் டக்ளஸ் எம்....
அராசாங்கத்திற்கான உற்சாகமூட்டல்களே எதிரணியின் போராட்டங்கள் - வைராக்கியத்துடன் எதிர்கொள்வோம் என்கிறார...