கடற்றொழில் மற்றும் நீரக வள அமைச்சின் தைப் பொங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில்: மோதரை விஷ்னு ஆலயத்தி்ல் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ , அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சிறப்பு பூசை வழிபாடு!

Wednesday, January 15th, 2020

கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் தைப் பொங்கல் நிகழ்வு பேலியகொட மீன் சந்தையில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.

உழவர் திருநாளாம் தைத்திருநாள் இன்று. இந்த திருநாளில் சூரிய பகவானுக்கு நன்றி தெரிவித்து பொங்கல் செய்து சிறப்பு பூசை வழிபாடுகள் தமிழர் வாழும் பகுதிகள் மட்டுமல்லாது இலங்கையின் அநேக பகுதிகளில் கொண்டாப்பட்டது.

இந்நிலையில் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சின் தைப் பொங்கல் நிகழ்வு பேலியகொட மீன் சந்தையில்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.

இதனிடையே மோதரை விஷ்னு ஆலயத்தி்ல் நடைபெற்ற சிறப்பு பூசை வழிபாடுகளில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.  

அத்துடன் பேலியகொட மீன்சந்தையின் உள்ளக வீதி புனரமைப்பு பணிகள் தைப் பொங்கல் தினமான இன்றையதினம் கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் ஆரம்பித்து  வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts: