கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள தொழில்சார் பாதிப்புக்களை களைவது தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கலந்துரையாடல்!

Friday, October 30th, 2020

கொவிட் 19 காரணமாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள தொழில்சார் பாதிப்புக்களை களைவதற்கு மேற்கொள்ளக் கூடிய மாற்று ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலில், கடற்றொழில் திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான உதவிப்பணிப்பாளர் சுதாகரன், கடற்றொழில்   கூட்டுத்தாபனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிருஷாந்த மற்றும் கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது, கடற்றொழிலாளர் பிரதிநிதிகள் மற்றும் திணைக்களத்தின் அதிகாரிகளுக்கிடையிலான விரிவான கலந்துரையாடல் ஒன்றை நாளை(31.10.2020) நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்மை  குறிப்பிடத்தக்கது.

Related posts:

தேசிய அரசியல் நீரோட்டத்தை எமது மக்களுக்காக பயன்படுத்துவதில் வெற்றி கண்டவர்கள் நாம் - டக்ளஸ் தேவானந்...
வர்த்தகர்களிடம் விவசாயிகள் சிக்கிக் கொள்வதற்கு நெல் கொள்வனவிலுள்ள முறைகேடுகளே காரணம் - டக்ளஸ் எம்.ப...
நிலைபேறானஅபிவிருத்தி திட்டத்தின் கீழ், வடக்கில் கடற்றொழில் மற்றும் நீர்வேளாண்மை சார் செயற்பாடுகளின் ...