கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதார ஒத்துழைப்பு வேண்டும் – இந்தியத் தூதுவரிடம் கடற்றொழில் அமைச்சர் கோரிக்கை!

Sunday, June 27th, 2021

பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு வாழ்வாதார ஒத்துழைப்புக்களை இந்தியா வழங்க வேண்டும் என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் கோபால் பாக்லேயிற்கும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிற்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

பேர்ள் எக்ஸ் பிரஸ் கப்பல் விபத்து, மற்றும் கொறோனா முடக்கம் போன்றவற்றினால் நாடளாவிய ரீதியில் கடற்றொழில் செய்பாடுகளும் கடற்றொழிலாளர்களும் எதிர்கொண்டுள்ள சவால்கள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சரினால் இந்தியத் தூதுவரிற்கு எடுத்துக் கூறப்பட்டது.

மேலும், கடற்றொழிலாளர்கள் எதிர்கொண்டுள்ள வாழ்வாதார சவால்கள் தொடர்பாக இதன்போது தெளிவுபடுத்திய கடற்றொழில் அமைச்சர், வாழ்வாதார சவால்களை எதிர்கொள்வதற்கான ஒத்துழைப்பினை இந்தியாவிடம் இருந்து எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், இலங்கை மக்கள் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், இந்தியா விரைந்து உதவுவதை நன்றியுடன் நினைவுபடுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடற்றொழிலாளர்களுக்கும் இந்தியாவின் ஒத்துழைப்புக் கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் வெளியிட்டார்.

இதுதொடர்பாக கருத்து தெரிவித்த இந்தியத் தூதுவர், தமது வெளியுறவு அதிகாரிகளுடன் கலந்துரையாடி சாதகமான முடிவுகளைத் தெரிவிப்பதாக கடற்றொழில் அமைச்சரிடம் உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இறந்த உறவுகளை நினைவு கூரவும் நினைவுத் தூபி அமைப்பதற்கும் விரைவில் தனிநபர் பிரேரணை! - டக்ளஸ் தேவானந்த...
வடக்கின் விவசாய பண்ணைகளில் முன்னாள் போராளிகளுக்கு தொழில்வாய்பு வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்த...
எல்லைதாண்டிய கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வருடன் விரைவில் பேச்சு – அமைச்சர் டக்ளஸ் த...

நாம் மக்களிடம் வாக்குக் கேட்பது மக்களின் நலன்களுக்காகவே - தம்பலகாமத்தில் டக்ளஸ் எம்.பி.
வட கடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் நிறுவத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர்களுடன் அமைச்சர் டக்...
சித்திரை புத்தாண்டின் வரவில் தேசமெங்கும் புது மகிழ்வு பூக்கட்டும் – வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் ட...