கடற்றொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டம் வடக்கு, கிழக்கில் அதிகம் தேவை! நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Monday, March 7th, 2016

வறிய கடற்றொழிலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டத்தை ஆரம்பிக்கவுள்ள இந்த அரசின் செயற்பாட்டை வரவேற்றுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், கடந்த கால அழிவு யுத்தம் மற்றும் இயற்கை அழிவுகள் காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு இத் திட்டத்தின் வீடுகள் அதிகமாகத் தேவைப்படுகின்றன என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.

இவ் விடயம் தொடர்பில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சரின் அவதானத்திற்குக் கொண்டுவந்துள்ள  செயலாளர் நாயகம் அவர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாண கடற்றொழிலாளர்களின் நிலைமைகளை கவனத்தில் எடுத்து, விஷேட அடிப்படையில் இத் திட்டத்தின் அதிக வீடுகளை இப்பகுதிகளில் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார நிலையை மிகவும் மேம்பாடடையச் செய்ய வேண்டிய நிலையில், அதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்வது குறித்து அவதானஞ் செலுத்தும்படியும்,   கடற்றொழிலாளர்களுக்கு  வாழ்விட வசதிகளை வழங்க முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: