கடற்றொழிலாளர்களின் வாழ்வியலை பாதிக்கும் நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டம்!

Monday, March 2nd, 2020

கடற்றொழிலாளர்களின் வாழ்வியலை பாதிக்கும் எந்தவகையான நடவடிக்கைகளையும் அனுமதிக்க முடியாது என்றும் அவ்வாறான நடவடிக்கைகளுக்கு தன்னுடைய கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க பின்நிற்கப் போவதில்லை எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

மொறட்டுவ தொடக்கம் தெஹிவளை வரையான பிரதேசத்தில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு நடவடிக்கை தமது வாழ்வியலைப் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக குற்றஞ்சாட்டும் குறித்த பிரதேச மக்கள் அச்செயற்பாட்டை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் நோக்கில் மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழிலில் அமைச்சுக்கு இன்று(02.03.2020)  வருகை தந்தனர்.

இதன்பேர்து குறித்த பிரதேச மக்களின் கோரிக்கைகளை செவிமடுத்த அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்ததோடு குறித்த மண் அகழ்வு செயற்றிட்டமானது சுற்றாடல் மற்றும் வன ஜீவராசிகள் அமைச்சினால் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ள நிலையில் சம்பந்தப்பட்ட மண் அகழ்வு தொடர்பான தன்னுடைய நிலைப்பாட்டை ஏற்கனவே அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாவும் தெரிவித்தார்.

குறிப்பாக அங்குலான பிரதேசத்தில் மண் அகழ்வு மேற்கொள்ளப்படுகின்ற பட்சத்தில் குறித்த பிரதேசத்தில் வாழும் கடற்றொழில்சார் குடும்பங்களின் வாழ்வியலுக்கு பாதிப்பு ஏற்டுமாயின் அதுதொடர்பாக ஆராய்ந்து நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சரவைக்கு எழுத்து மூலம் தெரியப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் குறித்த பிரதேசத்தில் மண் அகழ்வு மேற்கொள்ளப்படுவதாக சொல்லப்படுகின்ற நிலையில் குறித்த பிரதேசத்திற்கு நாளை(03.03.2020) நேரடியாக விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்த பின்னர், தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வுபெற்றுத்தாருங்கள் - டக்ளஸ் எம்பியிடம் மன்னார் நடுக்குடா பகுதி மக்கள்...
தரமுயர்த்தப்பட்டபோதும் மீண்டும் பாதிப்புக்களை சந்திக்க நேரிடுகின்றது - தீர்வு தாருங்கள் என புதிதாக உ...
ஆடைத்தொழிற்சாலை தொடர்பில் கிளி. மாவட்ட உயரதிகாரிகளுடன் அமைச்சர் டக்ளஸ் கலந்துரையாடல்! உரிய நடவடிக்க...