கடற்றொழிலாளர்களின் வாழ்வா தாரத்தை பாதிக்கும்  நடவடிக்கை களுக்கு நாம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கப்போ வதில்லை – டக்ளஸ் தேவானந்தா

Wednesday, July 12th, 2017

எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கோ அல்லது பொருளாதாரத்துக்கோ பாதகம் ஏற்படுத்தும் வகையிலான தொழில் நடவடிக்கைகளுக்கு நாம் ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்பாணத்திலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் பாஷையூர் கடற்றொழில் அபிவிருத்திச் சங்க பிரதிநிதிகளுடனான சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

யுத்த காலங்களிலும் சரி யுத்தம் நிறைவுற்றகாலத்தின் பின்னரும் சரி எமது கடற்றொழிலாளர்கள் அவ்வப்போது தமது தொழிற்றுறைகளை சீராக முன்னெடுப்பதில் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருகின்றனர். இதன்காரணமாக கடற்றொழிலை தமது ஜீவனோபாயமாகவும் வாழ்வாதாரமாகவும் கொண்டுவாழும் பல்லாயிரக்கணக்கான குடும்பங்களின் வாழ்வாதாரமும் பொருளாதாரமும் பாரிய நெருக்கடிகளுக்கும் இடர்பாடுகளுக்கும் முகங்கொடுக்கவேண்டிய துர்ப்பாக்கியமும் ஏற்பட்டுள்ளது.

வடபகுதிக் கடற்பரப்பில் வெளிமாவட்ட மற்றும் இந்திய மீனவர்களது அத்துமீறியதும் தடைசெய்யப்பட்டதுமான தொழில்துறை நடவடிக்கைகளால் எமது கடல்வளங்கள் அழிக்கப்படும் அதேவேளை எமது கடற்றொழிலாளர்களின் தொழில் நடவடிக்கைகளும் இற்றைவரையில் பாதிக்கப்பட்டுவருகின்றன.

தடைசெய்யப்பட்ட அத்துமீறிய தொழில் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தவேண்டுமென நாம் துறைசார்ந்த தரப்புகளிடம் தொடர்ச்சியாக எமது கடற்றொழிலாளர்கள் சார்பில் வலியுறுத்திவருகின்றோம்.

அந்தவகையில்தான் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்துக்கும் பொருளாதாரத்துக்கும் பாதகம் ஏற்படுத்தும் விதமான எந்தவொரு தொழில் நடவடிக்கைகளுக்கும் நாம் ஆதரவளிக்கப்போவதில்லை என்பதை சுட்டிக்காட்டவிரும்புகிறேன் என தெரிவித்தார்.

Related posts:

'சுபீட்சத்தின் நோக்கில் விவசாய மறுமலர்ச்சி' - அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே,டக்ளஸ் தேவானந்தா ஆ...
கடற்றொழில் - நீர் வேளாண்மை விருத்திக்கு இருதரப்பு ஒப்பந்தம் - வியட்நாம் தூதுவருடன் கடற்றொழில் அமைச்ச...
அமெரிக்க தமது நலன் சார்ந்து சிந்தித்தாலும், இலங்கை தன்னலன் சார்ந்தே சிந்தித்து செயற்படும் - அமைச்சர்...

கல்முனை விவகாரத்திற்குக்கூட தீர்வு காண முடியாதவர்கள் புதிய அரசியல் யாப்புக் குறித்து பேசுவது எதற்கு?...
கடற்றொழிலாளர் பிரச்சினை தீராவிட்டால் அமைச்சுப் பதவியை தூக்கி வீசுவேன் - முல்லையில் அமைச்சர் தேவானந்த...
யாழ் பழைய பூங்காவில் உள்ள விளையாட்டு மைதானங்களின் நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய...