கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை ஆய்வு செய்தே இறுதி முடிவு எட்டப்படும் – டக்ளஸ் தேவானந்தா

201707141451496567_jammusrinagar-highway-reopened-for-traffic_SECVPF1-720x450 Friday, July 14th, 2017

வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் 7000 மில்லியன் ரூபா நிதியுதவியுடன் மீன்பிடி துறைமுகம் ஒன்றை நிர்மாணிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது.

இதேபோன்று யாழ்ப்பாணம் குருநகரிலும் மீன்பிடித்துறைமுகம் ஒன்றை அமைப்பதற்கான திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்

முதற்கட்டமாக பருத்தித்துறையில் மின்பிடித் துறைமகத்தை அமைப்பது தொடர்பில் இப்பகுதி கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. அதன் அடிப்படையில் மக்களினதும் கடற்றொழிலாளர்களினதும் சாதக பாதக நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்த பின்னரே இறுதி மடிவுகள் எட்டப்படமுடியும் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேற்படி கலந்துரையாடல் பருத்தித்துறை கொட்டடி பகுதியில் கடற்றொழில் அமைச்சு மற்றும் துறைமுக அபிவிருத்தி திணைக்களத்தினால் இன்றையதினம் (14) மேற்கொள்ளப்பட்டது.

குறித்த கலந்துரையாடலின் நிறைவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ‘கடற்றொழில் துறைமுகமாக பருத்தித்துறை மற்றும் குருநகர் ஆகிய இரண்டு இடங்கள் அடையாளம் காணப்பட்டன. இவை இரண்டும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி பங்களிப்புடன் மீன்பிடித் துறைமுகங்களாக நிர்மாணிக்கப்படவுள்ளன.

முதற்கட்டமாக 7 ஆயிரம் மில்லியன் ரூபா செலவில் பருத்தித்துறை துறைமுகம் நிர்மாணம் செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்துரையாடலின் போது கடற்றொழிலாளர்கள் தமது அபிப்பிராயங்களை தெரிவித்துள்ளனர். மிக விரைவில் கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை மீளாய்வு செய்து உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

இதனிடையே அண்மையில் துன்னாலைப்பகுதியில் இளைஞர் ஒருவர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு பலியாகியிருந்தமை ஒரு துரதிஷ்டவசமானதும் கவலையளிக்கும் விடயம் என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.


மாற்று வலுவுள்ள பல்கலை. மாணவர்களுக்கான மடிக்கணனி திட்டத்தில் மாற்றம் வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா!
கப்பாச்சி கிராம மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவா...
இலங்கையர்களாக வாழ்வதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழக்கமுடியாது - டக்ளஸ் தேவானந்தா!
நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையே சிறுபான்மை  மக்களுக்கு சாதகமானது - டக்ளஸ் தேவானந்தா!
நேத்திரா TV யின் வெளிச்சம் நிகழ்ச்சியில் இரவு 10 மணிக்கு டக்ளஸ் தேவானந்தா பங்கேற்கிறார்.
IMG-7a62efb9fa5a0bfd5ab09254907a0640-V

தேர்தல் வருகிதெண்டு செஞ்சது இப்படி மாட்டிவிட்டுது பாருங்கோ…..!