கடற்றொழிலாளர்களின் நலன்களுக்கு முரணாக எந்தவொரு செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பமாட்டாது – அமைச்சர் டக்ளஸ் உறுதிபடத் தெரிவிப்பு!

Sunday, November 21st, 2021

கடற்றொழிலாளர்களின் நலன்களுக்கு முரணாக எந்தவொரு செயற்பாடுகளும் மேற்கொள்ளப்படாது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

முன்பதாக வடக்கு மாகாணத்தில் முடிந்தளவு கடலட்டைப் பண்ணைகளை உருவாக்கி கடற்றொழிலாளர்களுக்கு நிலையான பொருளாதாரக் கட்டமைப்பினை உருவாக்குவதற்கான வேலைத்திட்டம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

அத்துடன் கடலட்டை பண்ணை அமைப்பதற்கு பொருத்தமான இடங்களைத் தெரிவு செய்து அடையாளமிடும் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குறித்த செயற்பாடு, பாரம்பரிய தொழில் முறைகளில் ஈடுபடுகின்வர்களுக்கு எதிர்காலத்தில் அச்சுறுத்லை ஏற்படுத்தப்படப் போகின்றது என்ற கருத்து சில விஷமிகளினால் பரப்பப்பட்டு வருகின்றது.

இந்நிலையிலேயே பூநகரி, தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகாரசபையில் இன்று பிரதேச கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகளை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கலட்டைப் பண்ணைகள் மக்களின் நலன்களை அடிப்படையாகக் கொண்டே மேற்கொள்ளப்பட்டு  வருவதாகவும், எந்தவொரு பாரம்பரிய தொழில் முறைகளையும் பாதிக்கும் வகையில் கடலட்டைப் பண்ணைகள் உருவாக்கப்பட மாட்டாது என்றும் தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், குறுகிய நோக்கங்களுடனும் மக்களின் பிரச்சினைகள் தீராப் இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களினாலும் வெளியிடப்படும் கருத்துக்களை கவனத்தில் எடுக்க வேண்டாம் என்றும் தெரிவித்தார்.

இதனிடையே பூநகரியில் அமைந்துள்ள தேசிய நீரியல்வள அபிவிருத்தி அதிகார சபையின் அலுவலகத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடலட்டை பண்ணைகளை உருவாக்கும் வேலைத் திட்டத்தினை விரைவுபடுத்தும் வகையில், தொடர்புபட்ட திணைக்களங்களின் பிராந்திய பிரதானிகளை சந்தித்து ஒங்கிணைந்த செயற்பாடுகளை விரைவுபடுத்தற்கான ஆலோசனைகளை வழங்கியிரந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை கிராஞ்சி ஸ்ரீ முருகன் கடற்றொழிலாளர் சங்கத்திற்கு தெரிவு செய்யப்பட்ட புதிய நிர்வாகத்தினலும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts:

அராலித்துறையில் இறால் வளர்ப்புக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள பிரதேசத்தை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில...
வாடகை நெருக்கடிக்கு மனிதாபிமான மானியம் வழங்கப்பட வேண்டும் - அமைச்சரவையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...
தனித்துவமான வரலாற்றை கொண்டது ஈ.பி.டி.பி : மாற்றாரின் வரலாற்றில் சவாரி செய்யும் தேவை எமக்கு கிடையாது...

வடக்கின் அபிவிருத்தி குறித்து காலத்தை வீணடிக்காமல் ஆக்கப்பூர்வமாக செயற்பட முன்வர வேண்டும்! நாடாளு...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு யாழ்ப்பாண மக்கள் பிரமாண்ட வரவேற்பு: வீதியெங்கும் விழாக்கோலம்!
ஆட்சியில் பங்கெடுத்துள்ள கூட்டமைப்பு அதிகாரத் துஷ்பிரயோகத்தில் ஈடுபடுகின்றது - ஈ.பி.டி.பி தெரிவிப...