கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – 21 ஆம் திருத்தச் சட்டத்தினால் 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கு பாதிப்பு இல்லை – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Tuesday, May 24th, 2022

கடற்றொழிலாளர்களின் எரிபொருள் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா 21 ஆம் திருத்தச் சட்டத்தினால் 13 ஆம் திருத்தச் சட்டத்திற்கு பாதிப்பு இல்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளதுடன்  தலைவர்களை மாற்றுவது பொருளாதார நெருக்கடிகளுக்கு தீர்வாக அமையாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இன்றையதினம் வவுனியா மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு மாவட்ட மக்களின் பல்துறைசார் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தற்ந்துகொண்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் சர்வதேச தொடர்புகளும், சவால்களை எதிர்கொண்ட அனுபவசாலியுமான பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஒருமித்த செயற்பாட்டின் மூலம் பொருளாதார நெருக்கடிகளில் இருந்து மீள முடியும். – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

இன்றையதினம் வவுனியா மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களின் பல்துறைசார் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து தீர்வுகளையும் பெற்றுக்கொடுத்திருந்தார்.

இஇதனிடையே

சுபீட்சத்தின் நோக்கு வேலைத் திட்டத்திற்கு அமைய 103 ஆறுகளை பாதுகாக்கும் தேசிய சுற்றாடல் கருத் திட்டத்தின் அங்கமாக, அங்கராயன் ஆற்றில் மேற்கொள்ளப்பட்ட புனர்நிர்மாணப் பணிகள் தொடர்பிலும் கள ஆய்வு செய்து நிலைமைகளை ஆராய்ந்தறிந்துகொண்டார்.

அத்துடன்  குறித்த செயற்றிட்டத்தின்போது அகழப்பட்ட மணலை விற்பனை செய்வது தொடர்பாகவும், கிடைக்கின்ற இலாபத்தில் ஒரு பகுதியை பிரதேச மக்களுக்கு தேவையான அபிவிருத்திக்கு பயன்படுத்துவது தொடர்பாகவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடலொன்றை முன்னெடுத்திருந்தார்.

இதன்போது, சம்மந்தப்பட்ட அதிகாரிகளும் சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இதனிடையே புதுமுறிப்புக் குளத்தில் புனரமைக்கப்பட்டு வருகின்ற நன்னீர் மீன்குஞ்சு வளர்ப்புத் தொட்டிகளை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இன்று நேரடியாக சென்று பார்வையட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

E.P.D.P.யின் வடக்கு – கிழக்கு பிராந்திய முக்கியஸ்தர்களுக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையி...
நாட்டில் அரசியல் குடும்பிச் சண்டை நீடிக்கின்றதே அன்றி மக்கள் நிம்மதியாக வாழக் கூடிய சூழல் இன்னமும் உ...
சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்தி எதிர்காலத்தை வெற்றி கொள்ளுங்கள் - ஒலுமடுவில் டக்ளஸ் எம்பி தெரிவிப்...

வாக்குறுதி வழங்கியவர்களுக்கு அழுத்தத்தை கொடுத்து போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைக்கும் என நம்புகிற...
அரசியல் நாடகங்களைத் தவிர்த்து எமது மக்களது காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் - டக்ளஸ் தேவானந்தா
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டம் வெற்றி: இறால் அறுடைக்கான அனுமதிக்கான அனுமதிகளை வழங்கியது ...