கடந்த காலங்களை உணர மறுத்தால் எதிர்காலத்தையும் தொலைத்து விடுவோம் – மயிலிட்டியில் அமைச்சர் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, March 3rd, 2021

மக்களின் காணிகள் மக்களுக்கே சொந்தமானது என்பதை மீணடும் வலியுறுத்தியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த காலங்களை எமது மக்கள் உணர மறுத்தால் எதிர்காலத்தையும் இழந்து விடுவோம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

மேலும், விடுவிக்கப்படாத மக்களின் காணிகளையும் விடுவிப்பதற்கு தேசிய நல்லிணக்கம் என்ற பொறிமுறை ஊடாக முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மயிலிட்டியில் இன்று (03.03.2021) நடைபெற்ற பலாலி மக்களுடனான சந்திப்பின் போதே கடற்றொழில் அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், தீர்க்கதரிசனமற்ற தமிழ் தலைமைகளின் அரசியல் தீர்மானங்களே இடம்பெயரக்காரணமாக இருந்ததாகவும், தற்போது மீளக் குடியேற முடியாமல் இருப்பதற்கும் அரசியல் தீர்மானங்களே காரணமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும், “தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற  பிரச்சினைகளை தீர்ப்பதற்கான அணுகுமுறைகள் தொடர்பாக சரியான புரிதல் இல்லாமையே பிரதான காரணமாக இருக்கின்றது.

சர்வதேச நாடுகள் எந்த வகையிலும் உதவப் போவதில்லை. ஆனால் அவ்வாறு பேசுகின்ற தரப்புக்களின் பின்னால் தான் எமது மக்கள் நம்பிக்கை வைக்கின்றார்கள். அதன் காரணமாகவே பிரச்சினைகள் தீராத பிரச்சினைகளாக காணப்படுகின்றன.

தேசிய நல்லிணக்கப் பொறிமுறை ஊடாக மாத்திரமே பிரச்சினைகளை கையாள முடியும் என்ற புரிதல் எமது மக்களுக்கு ஏற்படுமானால், அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்த்துக் கொள்ள முடியும்.

பிரச்சினைகளுக்கான திறவுகோல் மக்களிடமே காணப்படுகின்றது. அந்த திறவுகோலை சரியாக மக்கள் பயன்படுத்துவார்களாயின் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ள முடியும்” என்று தெரிவித்தார்.

அத்துடன், விடுவிக்கப்பட வேண்டிய மக்களின் காணிகள் தொடர்பான விபரங்களை பிரதேச செயலாளர்களிடம் கோரியுள்ளதாகவும், அதுதொடர்பாக அமைச்சரவையில் கலந்துரையாடி காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேவேளை, மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு  விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், குறித்த துறைமுகத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார். மேலும், மயிலிட்டிப் பிரதேச கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டார்

இதேநேரம் மயிலிட்டி மீன்பிடித் துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த துறைமுகத்தின் செயற்பாடுகள் தொடர்பாகவும் மேற்கொள்ளப்பட வேண்டிய வேலைத்திட்டங்கள் தொடர்பாகவும் ஆராய்ந்தறிந்துகொண்டதுடன் மயிலிட்டிப் பிரதேச கடற்றொழிலாளர்களின் எதிர்பார்ப்புக்கள் தொடர்பாகவும் கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: