கடந்த ஆட்சியில் ஏமாற்றப்பட்டவர்களுக்கும் நம்பிக்கை அளித்தார் அமைச்சர் டக்ளஸ்!

கடந்த ஆட்சிக் காலத்தில் தொல்பொருள் திணைக்கள பணியாளர்களாக சுமார் 1200 பேருக்கு நாடளாவிய ரீதியில் தற்காலிக நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தன.
கடந்த 2017 ஆம் ஆண்டு குறித்த நியமனங்கள் வழங்கப்பட்ட போது, 6 மாதங்களில் நிரந்தரமாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
எனினும், 2019 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்படும் வரை நிரந்தரமாக்கப்படாத நிலையில், கடந்த ஜனவரி மாதம் அனைத்து நியமனங்களும் இரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனால், வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட சுமார் 133 பேர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து தங்களது நிலையினை எடுத்துக் கூறினர்.
இதுதொடர்பில் அவதானம் செலுத்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த நியமனங்கள் யாரினால், எவ்வாறான நோக்கங்களுக்காக வழங்கப்பட்டிந்தாலும், தற்போது பாதிக்கப்பட்ட நிலையில் தன்னிடம் வந்திருக்கின்றபடியால், தேர்தலுக்கு பின்னர் குறித்த நியமனங்களை பெற்றுத் தருவதாக உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|