கடந்த ஆட்சியாளர்களின் மோசமான முகாமைத்துவம் – பாரிய பின்னடைவை சந்தித்த வடகடல் நிறுவனத்தை மீண்டும் சிறந்த நிலைக்கு கொண்டுவருவதற்கு அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை!

Monday, March 7th, 2022

கடந்த கால ஆட்சியாளர்களின் மோசமான முகாமைத்துவம் காரணமாக பாரிய பின்னடைவை சந்தித்துள்ள வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகளை மீண்டும் சிறந்த நிலைக்கு கொண்டு வருவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை இன்று சந்தித்துக் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நிறுவனத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக கேட்டறிந்ததுடன் தேவையான ஆலோசனைகளையும் வழங்கினார்

இதேவேளை நாட்டின் பொருளாதாரத்திற்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் சிறந்த பங்களிப்பை வழங்கக் கூடிய கடலட்டை வளர்ப்பில் மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

இதனால் புதிய கடலட்டைப் பண்ணைகள் அதிகரித்து வருகின்றமையினால், பண்ணைகளுக்கு தேவையான கடலட்டை குஞ்சுகளை பெற்றுக் கொள்வதற்கு சாத்தியமான வழிவகைகள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சம்மந்தப்பட்ட தரப்பினருடன் இன்று கலந்துரையாடினார்

நாட்டின் பொருளாதாரத்திற்கும், மக்களின் வாழ்வாதாரத்திற்கும் சிறந்த பங்களிப்பை வழங்கக் கூடிய கடலட்டை வளர்ப்பில், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியின் பலனாக மக்கள் ஆர்வத்துடன் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

இதனால் கடலட்டை குஞ்சுகளுக்கான தேவை சடுதியாக அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

பயணிகளின் பாதுகாப்பில் அக்கறையோடுசெயற்படுங்கள் - வடக்கு, கிழக்கு தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் ச...
ஆளணி உள்ளீர்ப்பில் அர்த்தமுள்ள அணுகுமுறை வேண்டும் - செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
தடைசெய்யப்பட்ட கடற்றொழில் முறைகளை வடக்கில் உடடியாக தடை செய்ய அமைச்சரவை தீர்மானம்: அமைச்சர் டக்ளஸ் நட...

மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கான நிரந்தர தீர்வுகளை நோக்கியதாகவே எமது பயணங்கள் தொடரும் - வவுனிய...
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை – இடை நிறுத்தப்பட்டிருந்த வட்டுவாகல் பாலத்தின் அகழ்வுப் பணிகள் ...
சர்வதேச அரங்கில் ஈ.பி.டி.பி. கோரிக்கைகள் வலியுறுத்தப்படுகினறன - அமைச்சர் டக்ளஸ் பெருமிதம்!