ஒழுங்குமுறைகள் மீறப்படுமாயின் சகித்துக் கொள்ள முடியாது – அவ்வாறான கடலட்டைப் பண்ணைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!
Wednesday, September 28th, 2022ஒழுங்கு முறைகளை பின்பற்றி கடலட்டைப் பண்ணைகள் உருவாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ள கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, எமது மக்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவற்கு கிடைத்த சந்தர்ப்பத்தினை முடிந்தளவு பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் கடலட்டைப் பண்ணைகள் தழுவல் முறையில் அனுமதி வழங்கப்பட்டு உருவாக்கப்பட்டுள்ள போதிலும், ஒழுங்குமுறைகள் மீறப்படுமாயின் சகித்துக் கொள்ள முடியாது எனவும், அவ்வாறான பண்ணைகள் உடனடியாக அகற்றப்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.
யாழ் மாவட்ட கடற்றொழில் சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கடலட்டைப் பண்ணையாளர்களுடன் இன்று நடைபெற்ற சந்திப்பின் போதே, கடற்றொழில் அமைச்சர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அத்துடன், தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தொடர்பாக குறித்த கலந்துரையாடலில் பிரஸ்தாபித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, உடனடியாக சுருக்கு வலைத் தொழிலைக் கட்டுப்படுத்துவதற்கு கடற்றொழில் திணைக்களம், கடற்படையினர், கடற்றொழில் சங்கங்கள் இணைந்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன் தொடர்ச்சியான கூட்டு நடவடிக்கை ஒன்றை மேற்கொளவதற்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் பிரஸ்தாபித்துள்ளதாகவும் தெரிவித்தார். –
இதனிடையே
முச்சக்கர வண்டிகளுக்கு வாரம் ஒன்றிற்கு வழங்கப்படுகின்ற பெற்றோலை அதிகரித்து வழங்குவதற்கும், பதிவின்றி செயற்படுகின்ற முச்சக்கர வண்டிகளின் பதிவு செய்து ஒழுங்குபடுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
யாழ் மாவட்ட முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்க பிரதிநிதிகள் சங்கத்தின் தலைவர் அல்பிறைட் டெனிஸ் தலைமையில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை இன்று சந்தித்து குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை
வலி வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள பூர்வீகக் காணிகளை விடுவித்து தருமாறு வயாவிழான் மாணம்பிராய் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையினர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
குறித்த ஆலயத்தினை சூழவுள்ள சுமார் 600 ஏக்கர் காணி, நியாயமான காரணங்கள் ஏதுமற்ற நிலையில் தொடர்ந்தும் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக ரெிவித்த பரிபாலன சபையினர், குறித்த காணி விடுவிக்கப்படுமாயின் சுமார் 400 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீள்குடியமர முடியும் எனவும் தெரிவித்தனர்.
வலி வடக்கு காணி விடுவிப்பு தொடர்பாக ஏற்கனவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கூடிய விரைவில் கணிசமானளவு காணிகள் விடுவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
000
Related posts:
|
|