ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை மருந்து வகைகளின் விலைகளைக் கட்டப்படுத்துகின்ற பொறிமுறையை அறிமுகப்படுத்தியுள்ளதா?

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற மருந்து வகைகளை பதிவு செய்கின்ற கடமை பொறுப்பு வாய்ந்த ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையானது, தேசிய ஒளடதக் கொள்கை கட்டளைச் சட்டத்தின் கீழ் மருந்து வகைகளின் விலைகளைக் கட்டப்படுத்துகின்ற விலை பொறிமுறையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளதாகக் கூறுகின்ற நிலையிலும், அது இதுவரையில் நடைமுறை ரீதியில் செயற்படுத்தப்படுகின்றதா? என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வியெழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றில் நடைபெற்ற தேசிய ஒளடத ஒழுங்குபடுத்தல் அதிகார சபை சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகள் புலமைச் சொத்து சட்டம் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டபின் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் –
நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்ற மருந்து வகைகளின் விலைகளைக் கட்டுப்படுத்தக்கூடிய நிலைமையில்கூட இந்த அதிகார சபை இல்லாதது, மிகவும் கவலைக்குரிய விடயமாகவே உள்ளது. இன்றைய நிலையில் எமது மக்கள் மருந்து வகைகளின் உரிய விலையிலிருந்து 10க்கும் மேற்பட்ட மடங்கு அதிகமான விலையினைக் கொடுத்தே மருந்து வகைகளை வாங்கக்கூடிய நிலைமையில் இருக்கிறார்கள். இது, எமது மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுகின்ற செயலாகவே காணப்படுகின்றது.
அரச மருத்துமனைகளில் மருந்துகளுக்கான தட்டுப்பாடுகள் இல்லாமல் இல்லை. உரிய வகையில் ஒழுங்குபடுத்தல்கள் இல்லாமை காரணமாக மருந்து வகைகளின் தரங்கள் குறைந்து காணப்படுகின்றன. மருந்து வகைகளின் விலைகள் கட்டுப்பாட்டில் இல்லை. மருத்துவ பரிந்துரைகளின்றி தேவையற்ற மருந்து வகைகளின் இறக்குமதிகள் இடம்பெறுகின்றன. மருத்துவர்களது பரிந்துரைகளின்றியும், மருந்து சிட்டைகள் இன்றியும்கூட மருந்து வகைகள் கொள்வனவு செய்யக்கூடிய நிலைமைகள் காணப்படுகின்றன. நோய்கள் இனங்காணப்படாமல், நினைத்த வகையில் மருந்துகளை வாங்கிப் பயன்படுத்துகின்ற நிலைமைகள் தொடர்கின்றன.
எனவே, இத்தகைய நிலைமைகள் தவிர்க்கப்டல் வேண்டும். அதற்கான எற்பாடுகளை இந்த ஆணைக்குழு முன்னெடுக்க வேண்டும். பெயரளில் ஆணைக்குழுக்கள் இருப்பதால் யாருக்கும் எவ்விதமான பயன்களும் இல்லை என்பதை நான் இங்கு மீண்டும் வலியுறுத்த விரும்புகின்றேன்.
அதே நேரம், எமது நாட்டில் டெங்கு நோயின் தாக்கம் இன்னும் குறநை;தபாடில்லை என்றே தெரிய வருகின்றது. இந்த ஆண்டில் கடந்த 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் கொழும்பில் மாத்திரம் 1985 டெங்கு நோய்த் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டள்ளனர் எனத் தெரிய வருகின்றது. அதே நேரம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டில் இதுவரையில் 1260 டெங்கு நோய்த் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் தெரிய வருகின்றது. வடக்கு மாகாணத்திலும் இத்தகைய நோய்த் தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைந்ததாக இல்லை.
அதேபோன்று, எலிக் காய்ச்சல் நோயும் குறிப்பாக காலி மாவட்டத்தில் அதிகரித்துக் காணப்படுகின்றது கடந்த ஆண்டில் 440 பேர் இந் நோயினால் பாதிக்கப்பட்டு, அதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
எனவே, இத்தகைய நிலைமைகள் தொடர்பில் உரிய அமைச்சு அதிக அவதானங்களைச் செலுத்த வேண்டும் என்று கேட்டக் கொள்கின்றேன்.
அத்துடன், போலி வைத்தியர்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் நாட்டில் தற்போது எழுந்துள்ள நிலையும் காணப்படுகின்றது. அந்த வகையில் வடக்கில் குறிப்பாக, வவுனியா மாவட்டத்தில் இத்தகைய போலி வைத்தியர்கள் பலர் இருப்பதாக அண்மையில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் வவுனியா கிளை அறிவித்துள்ளது. இத்தகைய போலி வைத்தியர்கள் நாடளாவிய ரீதியில் சுமார் 30 ஆயிரம் பேர் வரையில் இருப்பதாகவும் கூறப்படுகின்றது. எனவே, இது தொடர்பிலும் அவதானங்கள் தேவை என அவர் மேலும் தெரிவித்துள்;ளார்.
Related posts:
|
|