ஒலுவில் மீன்பிடித் துறைமுக நிலைமைகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்வு!

Sunday, March 15th, 2020

ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டமையினால் பாரிய மண்ணரிப்பை எதிர்கொள்வதாக பிரதேச மக்களினால் குற்றஞ்சாட்டப்படும் நிந்தவூர் கடற்கரை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்ட கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நிலமைகளை நேரடியாக அவதானிதார்.

இன்றையதினம் (15.03.2020) குறித்த பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட அமைச்சரிடம் குறித்த பிரதேச கடற்றொழிலாளர்களின் பயன்பாடிற்காக அமைக்கப்பட்ட எரிபொருள் தாங்கி கடந்த 15 வருடங்களாக பழுதடைந்து இருக்கின்ற நிலையில் அதனை சீரமைத்து தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் இறங்குதுறை மற்றும் நவீன குளிரூட்டப்பட்ட களஞ்சிய அறை உட்பட்ட கட்டமைப்பு வசதிகளை பார்வையிட்ட கடற்றொழில் மற்றும் நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், ஒலுவில் துறைமுகம் அமைக்கப்பட்டதனால் கடலரிப்பு பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படும் பிரதேசங்கள் தொடர்பாக ஆய்வு செய்து நிரந்தர தீர்வை மேற்கொள்கின்ற அதேவேளை, ஒலுவில் மீன்பிடித் துறைமுகத்தின் செயற்பாடுகளை இந்த மாத இறுதிக்குள் ஆரம்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

Related posts:

அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தரப்படும் – புங்குடுதீவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்...
13 ஐ கோட்டபய ஏற்றுக்கொள்வார்: தமிழ் மக்களுகளின் பிரச்சினைகளுக்கு அதனூடாகவே தீர்வு - டக்ளஸ் எம்.பி...
அரசாங்கம் மாகாணசபை முறைமைக்கு மாறுபட்ட நிலைப்பாட்டை இன்னும் எடுக்கவில்லை - கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ...