ஒலுவில் துறைமுகத்திற்கு அமைச்சர் டக்ளஸ் விஜயம்- நிலைமைகள் தொடர்பில் விரிவாக ஆரய்வு!

Wednesday, June 22nd, 2022

ஒலுவில் துறைமுகத்திற்கான விஜயத்தினை மேற்கொண்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முதலாவது கட்டமாக ஆரம்பாக்கப்பட்டுள்ள ஐஸ் உற்பத்தி, கடலுணவு பதப்படுத்தல் மற்றும் களஞ்சியப்படுத்தல் செயற்பாடுகளை பார்வையிட்டார்.

பின்னர், இரண்டாம் கட்டமாக ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளவாறு ஒருநாள் மீன்பிடிப் படகுகளின் செயற்பாட்டை ஆரம்பிப்பதற்கு தேவையான முன்னேற்பாடுகள் தொடர்பாகவும் ஆராய்ந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அடங்கிய குழு ஒன்றினை அமைத்திருப்பதுடன், ஒலுவில் துறைமுகத்தினை மீன்பிடிச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்துவது தொடர்பான பூரண அறிக்கையினை ஒரு வார காலத்தினுள் சமர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொண்டார்.

அத்துடன், வர்த்தக துறைமுகமாக அமைக்கப்பட்டுள்ள பகுதியில், பலநாள் ஆழ்கடல் பிடிக் கலன்களை செயற்படுத்துவது தொடர்பாகவும் ஆராய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

வடபகுதி உடகவியலாளர்களுக்கும் அரசின் வரப்பிரசாதங்கள் கிடைக்கவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. ...
ஈ.பி.டி.பி. யின் யாழ்ப்பாணம் மாவட்ட விஷேட மாநாடு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் பேரெழுச்...
உள்ளூர் கடலுணவுகளை மீன்பிடிக் கூட்டுத்தாபனம் ஊடாக கொள்வனவு செய்ய 600 மில்லியன் ஒதுக்கீடு : அமைச்சரவை...