ஒருவருக்கு இருக்கும் பெயர் இன்னெருவருக்கும் இருக்கும் என்பதை தேர்தல் ஆணைக்குழு அறிந்திருக்கவில்லையா – தேர்தல் ஆணைக் குழுவுக்கு சுட்டிக்காட்டிய ஈ.பி.டி.பி!

Sunday, June 28th, 2020

ஒருவருக்கு இருக்கும் பெயர் வேறு பலருக்கும் இருக்கும் என்பதை தேர்தல் ஆணைக்குழு அறிந்திருக்கவில்லையா என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தேர்தல் ஆணைக்குழுவுக்குச் சுட்டிக்காட்டியுள்ளது.

நடைபெறவுள்ள  நாடாளுமன்ற தேர்தலில் கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் போட்டியிடும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் பட்டியலில் தங்கராசா புஸ்பராசா என்ற பெயர் இரண்டு மாவட்ட வேட்பு மனுக்களிலும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இத்தகைய ஒரு சம்பவத்தை மட்டும் சுட்டிக்காட்டி தேர்தல் ஆணைக்குழு அந்த வேட்புமனுக்கள் தேர்தல் விதிமுறைகளுக்கு மீறிய செயற்பாடு என்று சுட்டிக்காட்டி ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் விளக்கம் கோரியிருந்ததுடன் வியாக்கியானமும் செய்திருந்தது.

இந்நிலையில் திருகோணமலையிலும் அம்பாறையிலும் ஒரே பெயரை உடைய வேட்பாளர்கள் பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது உண்மைதான். ஆனாலும் அப்பெயர்கள் இரண்டும் வெவ்வேறான நபர்களுடையது. இதை வேட்பாளர் பட்டியலுடன் இணைக்கப்பட்டிருந்த தேசிய அடையாள அட்டை இலக்கங்களூடாக தீர்வைக் கண்டிருக்க முடியும்

அத்துடன் அந்த விண்ணப்பத்தில் தங்கள் திணைக்களத்திலுள்ள தேர்தல் தேருநர் இடாப்பினூடாக உறுதி செய்து கொள்ளப்பட்ட பிரதியும் இணைக்கப்பட்டிருந்தது என தேர்தல் ஆணைக்குழுவுக்கு சுட்டிக்காட்டியிருந்தது.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஒரு ஒருவருக்கு இருக்கும் பெயர் இன்னொருவருக்கு இருப்பது வழமையான ஒன்று என்றும் இதைக்கூட இலங்கையின் தேர்தல் ஆணைக்குழு ஆராய்ந்துபாராமல் வங்குரோத்து அரசியல்வாதிகளின் ஆதாரமற்ற முறைப்பாட்டை மட்டும் வைத்து விளக்கம் கோரியிருப்பது வேடிக்கையாக உள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது

Related posts:


சந்தர்ப்பங்களை பயன்படுத்தாதவர்கள் ஆலோசனை சொல்வது வேதனையளிக்கின்றது - டக்ளஸ் தேவானந்தா!
அத்தியாவசிய பொருட்களின் விலைகள் கட்டுப்பாடுகள் இன்றி அதிகரிப்பது வருந்தத் தக்கது - டக்ளஸ் தேவானந்தா ...
வெளிநாட்டு பல்கலை பட்டதாரிகளின் மேன்முறையீடுகளும் பரிசீலிக்கப்படும்: அமைச்சர் டக்ளஸ் மீண்டும் வலியுற...