ஒட்டுச்சுட்டான் பிரதேச சபை அலுவலகம் எப்போது அமைக்கப்படும்! நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா  கேள்வி! (வீடியோ இணைப்பு)

Friday, July 8th, 2016

இன்று வரையிலும் ஒட்டுச்சுட்டான் பிரதேச சபை அலுவலகம் புதுக்குடியிருப்பு பிரதேச சபையுடன் இணைந்து செயற்படுகின்றது.

இந்நிலையில், ஒட்டுச்சுட்டான் பகுதி வாழ் மக்கள் தமது பிரதேச சபை தொடர்பான தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதற்காக புதுக்குடியிருப்பு செல்ல நேரிடுவதாகவும் இதனால் குறித்த மக்கள் பல அசௌகரியங்களை சந்தித்துவருவதாகவும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று(7) கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஒட்டுசுட்டானில் பிரதேச சபை ஒன்றினை அமைத்து தருமாறு அந்த பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருக்கின்றனர். எனினும் அவர்களது கோரிக்கை இன்றளவிலும் நிறைவேறாமல் உள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் பிரதேச சபை ஒன்றை அமைப்பதில் தடைகள் எதுவும் இருக்கின்றனவா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தடைகள் ஏதும் இருப்பின் அவைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, உரிய பிரதேசபை அமைக்கப்படுமா எனவும் அவர் இதன் போது கேள்வியெழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: