ஐ.ஓ.எம். பிரதிநிதி – அமைச்சர் டக்ளஸ் இடையே விசேட சந்திப்பு – வி.எம்.எஸ். கருவிகளை பொருத்தும் செயற்பாட்டினை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பில் ஆராய்வு!

இலங்கையில் உள்ள பலநாள் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளுக்கு அவுஸ்ரேலிய நிதியுதவியுடன் ஐ.ஓ.எம். அமைப்பின் ஒத்துழைப்புடன் ஆரம்பிக்கப்பட்ட வி.எம்.எஸ். எனப்படும் படகு கண்காணிப்புக் கருவிகளை பொருத்தும் செயற்பாட்டினை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பாக, இலங்கைக்கான ஐ.ஓ.எம். பிரதிநிதியுடன் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்துரையாடினார்.
குறித்த வேலைத் திட்டத்தின் ஊடாக சுமார் 4000 இற்கும் மேற்பட்ட பலநாள் கலன்களுக்கு வி.எம்.எஸ். கருவிகளை பொருத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், முதலாவது கட்டத்தில் 1440 பலநாள் கலன்களுக்கு மாத்திரமே குறித்த கண்காணிப்புக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், இலங்கைக்கான ஐ.ஓ.எம். பிரதிநிதியை சந்தித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த வேலைத்திட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுப்பதில் காணப்படும் சவால்கள் மற்றும் அவற்றை கையாள்வதற்கான வழிவகைகள் தொடர்பாக ஆராய்ந்தார்.
இக்கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சின் செயலாளர், கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
00
Related posts:
|
|