ஏமாற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் – நீர்வேலி கரந்தன் மக்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி!

Wednesday, November 13th, 2019

நாம் எமது கருத்துக்களையும் நடைமுறை சார்ந்த விடயங்களையும் தான் தேர்தல் காலங்களில் மக்களிடம்.முன்வைத்து நடைமுறைப்படுத்தி வருகின்றோமே தவிர தென்னிலங்கை அரசுகளின் திட்டங்களை அல்ல. அந்த வகையில் நாம் கூறும் ஒவ்வொரு வாக்குறுதிகளுக்கும் நாமே பொறுப்பானவர்கள் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

நீர்வேலி கரந்தன் பகுதி மக்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நீண்டகாலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பினரால் அவர்களது சுயநல தேவைகளுக்காக ஏமாற்றப்பட்டு வரும் எமது மக்கள் அந்த ஏமாற்றுக்காரர்களிடமிருந்து விடுபட்டு தமது வாவில் முன்னேற்றம் கானவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாக உள்ளது.

அத்தகைய ஒரு சிறந்த சூழ்நிலையை எமது மக்களுக்கு உருவாக்குவதற்காகத் தான் நான் கடுமையாக உழைத்து வருகின்றேன். அதற்கு எமது கரங்களுக்கு அரசியல் அதிகாரம் வேண்டும். அந்த அதிகாரத்தை நீங்கள் எம்மை நம்பி எமது வஈழிமுறை நோக்கி அணிதிரளுங்கள். நான் உங்கள் பிரச்சினைகளுக்கும் தேவைப்பாடுகளுக்கும் நிரந்தர தீர்வை கண்டுதருவேன். நம்பிக்கையுடன் வரும் 16 ஆம் திகதி ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச அவர்களது வெற்றிக்கு பங்காளர்களாகுங்கள். நாம் செய்வோம் செய்விப்விப்போம் என்றார்.

Related posts: