“எழுக தமிழ்” பேரணியில் கலந்துகொள்ள முடிவுசெய்தது ஏன்? “எழுக தமிழ்” கூட்டுப்பேரணியாக அணிதிரண்டது ஏன்?

Sunday, October 2nd, 2016
“எழுக தமிழ்”நிகழ்வை எமது மக்களின் ஒருமித்த குரலின் எழுச்சி நிகழ்வாக நடத்தவே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் (ஈ.பி.டி.பி) விரும்பியது. “எழுக தமிழ்”நிகழ்வில் நாமும் இணைந்து“எழுக தமிழ்” கூட்டுப்பேரணியாக அணிதிரண்டு தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வெளிப்படுத்த வேண்டும் என்று தீர்மானித்து எமது ஆதரவை பகிரங்கமாகவே வெளிப்படுத்தியிருந்தோம்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) ஆதரவு எனும் நேசக்கரத்தை“எழுக தமிழ்”பேரணியை ஏற்பாடு செய்தவர்கள் வெளிப்படையாக பற்றிக் கொள்ளாத நிலையிலேயே எமது மக்களின் வேண்டுகோளுக்கு அமைவாக நாம் எமது மக்களோடு தனித்துவமாக அணிதிரளவேண்டிய தேவை உருவானது.
“எழுக தமிழ்” கூட்டுப்பேரணிக்கு, தமிழ் மக்கள் பேரவையோடும், அதனோடு இணைந்து ஆதரவு தெரிவித்த சில தமிழ் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்களுடனும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் (ஈ.பி.டி.பி) இணைந்து“எழுக தமிழ்”கூட்டுப் பேரணியை எழுச்சியோடு நடத்தவே விரும்பியபோதும், இறுதிநேரத்தில் தமிழ் மக்கள் பேரவையினரும்,அவர்களோடு இணைந்தவர்களும் ஒருபக்கமாகவும், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர் (ஈ.பி.டி.பி) இன்னொரு பக்கமாகவும் இரண்டு“எழுக தமிழ்”நிகழ்வுகளை நடத்தவேண்டிய சூழல் ஏன் ஏற்பட்டது என்பது தொடர்பாக எமது மக்களுக்கு தெளிவுபடுத்துவது எமது கடமையாகும்.
அன்பார்ந்த எமதுமக்களே!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய (ஈ.பி.டி.பி) நாம் அணிதிரண்டு வாருங்கள் என்று அறைகூவல் விடுத்தால் எந்தப் பொழுதிலும் திரண்டுவருவதற்கு நீங்கள் தயாராக இருக்கின்றீர்கள் என்பதற்காக நாம் நடைமுறைச்சாத்தியமற்ற அணுகுமுறை நோக்கியும், வெறும் உணர்ச்சிப் பெருக்கிலும்,கடந்தகால கசப்பானவரலாற்றுஅனுபவங்களைக் கருத்திற்கொண்டும் உங்களை வழிநடத்த விரும்பியிருக்கவில்லை.
27
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியாகிய (ஈ.பி.டி.பி) நாமும் தமிழ் பேசும் மக்களின் தாயகதேச விடியலுக்காகவும், அரசியல் அபிலாசைகளுக்காகவும், மற்றும் நமதுசுயநிர்ணய உரிமைக்காகவும் இந்த மண்ணில்  இரத்தம் சிந்திப்போராடியவர்கள். இந்தப் போராட்டத்தில் அங்கங்களையும், அன்பான உடன்பிறப்புக்களையும், தோள் கொடுத்து நின்ற சகதோழர்களையும் இழந்தவர்கள். இழப்பின் வலியை இரத்தமும், கண்ணீருமாக எமது மக்களுடன் அனுபவித்தவர்கள்.
ஆனாலும் மாறிவந்த அரசியல் சூழலை ஏற்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் எமது அரசியல் இலக்கு நோக்கிய பாதையை நடைமுறைச் சாத்தியமான வழிமுறைநோக்கி மாற்றிக்கொண்டு எமது மக்களுக்கு, அழிவுப்பாதையிலிருந்து ஆக்கப்பாதைக்கு நம்பிக்கையோடு மாற்றுவழியைக் காட்டியவர்கள்.
இந்நிலையில் எமது அரசியல் இலக்கு நோக்கிய பயணமானது, இருப்பதைப் பாதுகாப்பதற்கும், மேலும் பெற்றுக் கொள்ளவேண்டிய அரசியல் உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கும், எமது மக்களின் வாழ்வியல் உரிமைக்கான அடிப்படைமற்றும் அன்றாடப் பிரச்சினைகள் பலவற்றை தீர்ப்பதற்காகவுமே இருந்து வருகின்றது. எமக்கு மக்கள் வழங்கிய அரசியல் பலத்திற்கு ஏற்றவாறு இணக்க அரசியல் முயற்சிகளுக்கூடாக நாம் பல வெற்றிகளையும் பெற்றிருக்கின்றோம்.
26
அரசியல் தீர்வுகிடைக்கும்வரை தாயகமண்ணில் அபிவிருத்தியோ, மீள் எழுச்சியோ, மீள் குடியேற்றங்களோ தேவை இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கூறியதுடன் எமது மக்களின் அவலங்களை வேடிக்கையும் பார்த்துக்கொண்டிருந்தனர். திட்டமிட்டு எம்மீது பரப்பப்பட்ட அவப்பெயர்களையும், சேறடிப்புக்களையும் சுமந்து ஈ.பி.டி.பியாகிய நாமே எமது மக்களின் கண்ணீரைத்துடைத்ததுடன், சிதைந்து கிடந்த எமது தாயகப் பகுதியை அபிவிருத்தியால் தூக்கிநிறுத்தவும் செய்தோம். அதற்காக இரவுபகல் பாராமல் கடுமையாக உழைத்திருக்கின்றோம்.
ஆனாலும் தமிழ் பேசும் மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கான ஒரு மித்தகுரலுக்குபலம் சேர்க்க நாம் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாலும் ஏனைய தமிழ் கட்சிகளுடனும், பொது அமைப்புக்களுடனும் ஒன்றுபட்டு உழைக்கவும் தயாராகவே இருந்து வந்திருக்கின்றோம்.
25
அதற்காக நாம் யுத்தகாலத்தில் கூட அழிவில் இருந்து மீண்டெழுந்து அரசியல் தீர்வு பெற்று எமது மக்களை தலைநிமிரச் செய்வோம் வாருங்கள் என்று சக தமிழ் கட்சித் தலைமைகளை நோக்கி பல தடவைகள் பகிரங்க அழைப்புவிடுத்தும் வந்திருக்கின்றோம். எமதுஅழைப்பை சுயலாப அரசியல் நோக்கம் கொண்டவர்கள் கண்டுகொள்ளவில்லை. எமது அழைப்பை நிராகரித்தவர்களே அழிவுயுத்தத்திற்கு தூண்டுதலாகவும், எமது மக்களின் இத்தனை அழிவுகளுக்கும், இழப்புக்களுக்கும் காரணமானவர்கள் என்பதையும் சுட்டிக்காட்டவேண்டும்.
யுத்தத்திற்கு பிந்திய சூழலிலும் கூட  அனைத்து தமிழ்க் கட்சிகளையும் இணைத்து“தமிழ்க் கட்சிகளின் அரங்கம்”என்ற பொது உடன்பாட்டு கூட்டு ஒன்றையும் உருவாக்கி சிலகாலங்கள் செயலாற்றியிருக்கின்றோம்., அந்த முயற்சிகள் கூட சிலரது சுயலாப அரசியல் போக்குகள் காரணமாக தொடரமுடியாமல் போனமை துரதிஸ்டம் என்றே கருதுகிறோம்.
தேர்தலுக்காகவும், எமது மக்களின் வாக்குகளை அபகரிப்பதற்காகவும் ஒன்று படுவதை விடவும் எமது மக்களின் அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்காகவும், எமது மக்களின் வாழ்வியல் உரிமைகளை பலமான நிலையிலிருந்து பெற்றுக் கொள்வதற்காகவும் தமிழ்க் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் யாவும் ஒன்றுபட்டு உழைக்கவேண்டும் என்றும் விரும்பியிருந்திருந்தோம். ஒற்றுமைக்கான எமது எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறான ஒரு செய்தியாகவே நீண்ட இடைவெளிக்கு பின்னர் “எழுக தமிழ்”அழைப்பு வெளியாகியிருப்பதாகவே கருதினோம். “எழுக தமிழ்”ஒற்றுமைக்கான சமிக்ஞையாக அமையும் என்றும் நம்பியிருந்தோம்.
28
“எழுக தமிழ்”நிகழ்வின் ஏற்பாட்டுக்குழுவில் கலந்து கொள்ளுமாறு எமது கட்சிக்குதனிப்பட்ட அழைப்பு விடுக்கப்படவில்லை என்றபோதும் கூட, தமிழ் பேசும் மக்களின் ஒருமித்தகுரலுக்கு பலம் சேர்க்கநாமும் இப்பேரணிக்கு ஆதரவளிக்கவேண்டும்  என எமது கட்சி கூடிப்பேசி தீர்மானம் எடுத்திருந்தது.
எமது அரசியல் யதார்த்த மதிநுட்ப வழிமுறையில் இருந்தும், எமது அணுகு முறைகளில் இருந்தும் சக தமிழ் கட்சித்தலைமைகள் வேறுபட்ட அணுகுமுறைகளைக் கொண்டிருப்பினும் ஒருபொது உடன்பாட்டின் அடிப்படியில் “எழுக தமிழ்” கூட்டுபேரணியாக அணிதிரள்வோம் வாருங்கள் என்று எமது மக்களை நோக்கிநாம் அறை கூவல் விடுத்திருந்தோம்.
மக்களை அணிதிரட்டும் பணியில் நாம் ஈடுபட்டிருந்தபோது,தமிழ் மக்கள் பேரவையினர் சார்பில் செயற்பட்டபேரணியின் ஏற்பாட்டுக்குழுவினர் வெளியிட்டிருந்த ஊடக அறிக்கையில் தமக்கு ஆதரவளிக்கும் அமைப்புகளின் பட்டியலில் எமது கட்சியின் பெயர்  இடம் பெற்றிருக்கவில்லை. இச்செயலானது“எழுக தமிழ்”பேரணி என்பது தமிழ் பேசும் மக்களின் ஒருமித்தகுரலாக அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றுபட வேண்டும் என்ற உயரிய இலக்கை கொண்டிருக்கவில்லை என்பதையும், எமது கட்சியும்  “எழுக தமிழ்”பேரணியில் கலந்துகொள்வதை தமிழ் மக்கள் பேரவையில் இருந்தசில அரசியல் கட்சிகள் விரும்பவில்லை என்பதையும் அறிந்து எமது மக்கள் அதிருப்தியடைந்தனர்.
25
அதுமட்டுமல்லாமல் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினர் (ஈ.பி.டி.பி),“எழுக தமிழ்”பேரணியை குழப்பவே முயற்சிசெய்வதாகவும் ஒரு பொய்யான செய்தியை அந்த அரசியல் கட்சிகள் பிரசாரம் செய்தன. இச் செயற்பாடுகள் எமக்கு ஏமாற்றத்தைத் தந்தபோதும், எமது மக்களின் ஒருமித்த குரலைபலமாக ஒலிக்கச் செய்யவேண்டியகாலத் தேவையை நாம் உணர்ந்து பொறுமையோடு“எழுகதமிழ்” கூட்டுப் பேரணியை எமது மக்களின் பலத்துடன் தனித்துவமாக நடத்தி முடிக்கவேண்டுமென்று இறுதி நேரத்தில் முடிவுசெய்தோம்.
இதேவேளை“எழுக தமிழ்”பேரணியின் ஏற்பாட்டுக்குழுவில் இருந்தசிலர் மட்டும் அனைத்து கட்சிகளையும் இதில் ஒன்றிணைக்கவிரும்பியதுடன், நாம் கூட்டுப்பேரணியாக தனியே அணிதிரள்வதையும் அறிந்து இறுதிநேரத்தில் எம்மோடு தொடர்புகொண்டு தமது பேரணியில் இணைந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டதையும்  எமது மக்களுக்கு நேசமுடன் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
நாம் “எழுக தமிழ்”பேரணியில் கலந்துகொள்ளவிரும்பியதும், கூட்டுப்பேரணியாக எமது மக்களோடு அணிதிரண்டிருந்ததும் தேசிய நல்லிணக்கத்தை பாதுகாத்தபடி, எமது மக்களின் ஆழ்மனங்களில் இருந்து எழுந்து வரும் நியாயமான உரிமைக்குரலை ஒருமித்தகுரலாக எழுப்புவதன் ஊடாக தீராப்பிரச்சினையாக நீடித்துசெல்லும் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வுகாணவேண்டும் என்ற எமது இலட்சியக்கனவை வெளிப்படுத்துவதற்கேயாகும்.
024
ஆனால் “எழுக தமிழ்”பேரணிக்கு அறைகூவல் விடுத்தவர்களில் உள்ளடங்கியிருந்தசில அரசியல் கட்சியினரோ, எமது மக்களின் உணர்வுகளையும், திரட்சியையும் தமது அரசியலுக்கு ஆதாரமாகப் பயண்படுத்தவும், தமது அரசியல் கூடாரத்திற்குள் புரையோடிப் போயிருக்கும் சககட்சிகளுடனான முரண்பாடுகளுக்கு பதிலளிக்கும் சந்தர்ப்பமாகவும், பிரச்சினைகளைத் தீராப் பிரச்சினையாக வைத்திருப்பதற்குமே முற்பட்டிருந்தனர்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினரின் (ஈ.பி.டி.பி) அழைப்பை ஏற்று அணிதிரண்டு வந்திருந்த எமது மக்களின் உணர்வுகளை சிலர் துஸ்பிரயோகம் செய்வதற்கு அனுமதிக்கமுடியாது என்ற காரணமும் எம்மை“எழுக தமிழ்”நிகழ்வை தனித்துநடத்தும் அவசியத்தை ஏற்படுத்தியது.
இந்தநிலையிலேயே எமது அழைப்பை ஏற்று அணிதிரண்டுவந்திருந்த மகளீர் அமைப்புக்கள், இளைஞர் அமைப்புக்கள், தொழில்சார் அமைப்புக்கள், மற்றும் பொது அமைப்புக்களுடன் ஆலோசித்து தனித்துவமாக“எழுக தமிழ்”கூட்டுப்பேரணியை நடத்த முடிவுசெய்தோம். அதன்படி ஈ.பி.டி.பி தலைமையிலான“எழுக தமிழ்” கூட்டுப் பேரணியை வெற்றிகரமாக நடத்தியும் முடித்தோம்.
29
இதற்கிடையே நாம் தனித்துவமாக பேரணிநடத்தப் போகின்றோம் என்றதும், இரு அணிகளுக்குமிடையே மோதல்கள் ஏற்படும் என்றவர்களின் எதிர்வு கூரல்கள் எமது நிதானமான நடவடிக்கைகளால் பொய்யாகிப்போனது. ஈ.பி.டி.பியின் பேரணி ஏற்பாட்டாளர்கள் மீது தமிழ் மக்கள் பேரவையிலுள்ள சில கட்சிகள் வன்முறைகளை பிரயோகித்தபோதும், எமது பேரணி ஏற்பாடுகளை தடுத்துநிறுத்த முயற்சிசெய்த போதும் நாம் நிதானத்துடனும், சகிப்புத்தன்மையுடனும் பிரச்சினைகளை அணுகியிருந்தோம்.
தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் சில அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தமக்கு மக்களை அணிதிரட்டும் வல்லமை இல்லாதபோதும்,“எழுக தமிழ்”பேரணியில் உரையாற்றக் கிடைத்தது என்பதற்காக, “டக்ளஸ் தேவானந்தாவும் “எழுக தமிழ்”பேரணியை குழப்புவதற்கு முயற்சிசெய்தார்”என்று உளறி தமது காழ்ப்புனர்ச்சியை உமிழ்ந்தபோது“அந்தப் பேச்சு அவசியமற்றது”என்று அந்த இடத்திலேயே மக்கள் கண்டித்திருந்ததையும் எமது நிலைப்பாட்டுக்கு கிடைத்த வெற்றியாகவே நாம் கருதுகின்றோம்.
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய (ஈ.பி.டி.பி) நாம் எமதுமக்களின் அரசியல் உரிமைகள் வென்றெடுக்கப்படும்வரை ஓயப்போவதில்லை. அதற்காக அரசியல் முரண்பாடுகளுக்கு அப்பாலும் ஏனைய தமிழ்க் கட்சிகள், மற்றும் பொது அமைப்புக்களுடன் இணைந்து நடைமுறைச்சாத்தியமான பொது உடன்பாட்டுத் தளத்தல் இதய சுத்தியோடு ஒன்றுபட்டு உழைக்கஎன்றும் தயாராகவே இருக்கின்றோம்.
நாம் செல்லும் பயணம் வெல்லும். மத்தியில் கூட்டட்சி!  மாநிலத்தில் சுயாட்சி!! என்றும் நாம் மக்களுக்காக….

Related posts:

வடக்கின் கல்வித்துறையைப் போன்றே விளையாட்டுத்துறையும் பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது - நாடாளுமன்றில் டக்ளஸ...
வேட்பாளர்கள் வெல்வதை விட வாக்காளர்கள் வெல்லவேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பு - டக்ளஸ் எம்.பி!
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் 10 நாள்களில் 10 ஆயிரம் கட்டில்கள் திட்டம் - வடக்கு மாகாண சுகாதாரப் பணிப...

வடக்கிலும்  சுற்றுலாத் தளங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலிய...
உடுவில் ஸ்ரீ இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் சண்டேஸ்வரி ஆலயத்திற்கான அடிக்கலை அமைச்சர் டக்ளஸ் தேவானந...
வடக்கு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை பண்ணைகள் அனைத்தும் விதிமுறைகளுக்கு அமைவாக ஒழுங்குபடுத்தப...