எழுக தமிழ் எழுச்சி பேரணிக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தார்மீக ஆதரவு!

Friday, September 16th, 2016

எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு தமது தார்மீக ஆதரவை வழங்க தீர்மானித்துள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் அண்மையில் நடைபெற்ற கட்சியின் கூட்டத்தில் குறித்த விடயம் தொடர்பாக ஆராயப்பட்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

தமிழ் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை  வெளியுலகிற்கு தெரியப்படுத்தும் வகையில்   இம்மாதம் 24 ஆம் திகதி யாழ்ப்பாணம் முற்றவெளி மைதானம் வரையில் எழுச்சிப் பேரணி நடைபெறவுள்ளது.

இந்த எழுக தமிழ் எழுச்சிப் பேரணிக்கு ஈழ மக்கள் ஜனநாயக கட்சி தார்மீக ஆதரவை வழங்கி நிகழ்வின் வெற்றிக்கு வலுச்சேர்க்கும் வகையில் செயற்பட உள்ளதாக  கூட்டத்தின் போது தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

epdp news

Related posts:

வட மாகாண பாடசாலைகளுக்கு விஷேட நிதி ஒதுக்கீடுகள் வேண்டும் - நாடாளுமன்ற உரையில் டக்ளஸ் தேவானந்தா வலியு...
உள்ளுராட்சித் தேர்தல்கள் விரைவாக நடத்தப்படவேண்டும்  ஐரோப்பியயூனியன் பிரதிநிதிகளிடம் டக்ளஸ் தேவானந்தா...
இளைஞர் யுவதிகளின் அபிலாசைகளை பூர்த்தி செய்வதற்கான அடித்தளத்தை நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும் – டக்ளஸ...