எல்லைதாண்டி வருவோரின் அத்துமீறலைத் தடுத்து நிறுத்தி கடல்வளத்தை பாதுகாக்க வேண்டும்

Monday, October 9th, 2017

எல்லைதாண்டி மீன் பிடியில் ஈடுபடுவோரின் சட்டவிரோதச் செயற்பாடுகள் எமது தொழிலாளர்களுக்கு தொடர்ந்தும் தொழில் பாதிப்புக்களையும், தொழில் உபகரணங்கள் பாதிப்பையும் ஏற்படுத்துவதாகவே அமைந்து வருகின்றன.

பல தடவைகள் இவ்விடயம் தொடர்பில் நான் இந்த சபையில் எல்லைதாண்டி வருவோரின் அத்துமீறல்கள் தொடர்பாகவும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் அவர்கள் ஈடுபடுவதால் எமது கடல்வளத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாகவும் தெளிவுபடுத்தியுள்ளேன். ஆனாலும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று(09.10.2017) நாடாளுமன்றத்தில் காப்புறுதி தொழில் ஒழுங்குபடுத்தல் விவாதத்தில் பங்குகொண்டு உரையாற்றிய செயலாளர் நாயகம் அவர்கள் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,நேற்றைய தினமும் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்டவர்களால், வடமராட்சிக் கடலில், தொழிலில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எமது தொழிலாளர்களின் வலைகள் உட்பட தொழில் உபகரணங்களைச் சேதப்படுத்தியதுடன், தடைசெய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தி அவர்கள் மீன்பிடியிலும் ஈடுபட்டுள்ளனர்.

இதனால் தொழில் செய்ய முடியாமலும், தொழில் உபகரணங்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும் எமது கடற்றொழிலாளர்கள் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் இருக்கின்றனர். இவ்வாறு தொழில் பாதிக்கப்பட்டுள்ள கடற்றொழிலாளர்களுக்கு நஸ்டஈடுகள் வழங்கப்பட வேண்டும். அதேவேளை தொடர்ந்தும் எல்லைதாண்டி வருவதையும், தடைசெய்யப்பட்ட மீன்பிடித் தொழில் உபகரணங்களைப் பாவிப்பதையும் கட்டுப்படுத்த இராஜிய ரீதியில் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Related posts:

ஏழையின் வெறும் தேநீரில் அறவிடப்படுகின்ற வரிகள் செல்வந்தர்களின் மாடமாளி கைகளுக்கென அறவிடப்படு கின்றனவ...
யாழ்ப்பாணம் - ஊர்காவற்றுறை சேவையில் ஈடுபடும் பேருந்துகள் தொடர்பிலான இடர்பாடுகளுக்கு தீர்வு பெற்றுத்த...
உள்ளூர் உற்பத்திகளை பாதிக்கும் செயற்பாடுகளை அனுமதிக்க கூடாது - அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல...

இலங்கை போக்குவரத்து சபையின் வடபிராந்திய முகாமையாளர் வெற்றிடத்தை நிவர்த்தி செய்துகொடுத்த அமைச்சர் டக்...
பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான அழைப்பே அன்றி பதாதைகளுக்கான அழைப்பல்ல – அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!
மட்டக்களப்பில் அமைச்சர் டக்ளஸ் – மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் துறைசார் தரப்பினருடன் க...