எல்லைதாண்டிய கடற்றொழிலாளர் பிரச்சினை தொடர்பில் தமிழக முதல்வருடன் விரைவில் பேச்சு – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

இந்திய – இலங்கை பிரதமர்களுக்கிடையிலான காணொளி மூலமான கலந்துரையாடல் சுமூகமாக நடைபெற்றது என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
குறித்த கலந்துரையாடலின் பொது கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகிய நானும், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோருக்கிடையிலான பேச்சுவார்தை நடத்துவது இலகுவான வழிமுறையாக இருக்கும் என்று கருத்துப் பரிமாறப்பட்டுள்ளமையினால் மிக விரைவில் குறித்த பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் நுழையும் இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர் விவகாரத்திற்கு நிரந்தர தீர்வினை காண்பதற்கு விரைவில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
ஒன்றிணைந்த செயற்பாடுகளே எதிர்காலத்தை வளமாக்கும் – யாழ் பல்கலைக்கழக ஜனநாயக ஊழியர்களுடனான சந்திப்பில்...
மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாமைக்கான உண்மையான காரணம் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
வடகடல் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!
|
|