எல்லாளனும்  துட்டகைமுனுவும் இன ரீதியாக போரிடவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 25th, 2016

அடுத்ததாக இந்த நாட்டில் அநுராதபுர இராஜதானியை சுமார் 44 ஆண்டுகளாக ஒழுக்க விழுமியங்களோடு ஆட்சி புரிந்த எல்லாளன் மன்னனுக்கு உரிய மரியாதை செலுத்துமுகமாகத் துட்டகைமுனு மன்னனால் கட்டப்பட்ட சமாதியை இனங்கண்டு மீளப் புனரமைத்து அதனை மரியாதைக்குரிய இடமாகப் பிரகடனப்படுத்தும்படி நான் ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தேன்.  ஆனால், அதற்குரிய செயற்பாடுகள் எதுவும் இன்னும் முன்னெடுக்கப்படவில்லை என்பதையும் இங்கே கவலையோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 22 ஆம் திகதி 2017 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

அவர் இதுதொடர்பாக மேலும் உரையாற்றுகையில் –

எல்லாளன் – துட்டகைமுனு யுத்தம் என்பது ஓர் இராஜதானிக்காக இரு மன்னர்களுக்கிடையில் ஏற்பட்ட யுத்தமல்ல என்றும் இது தமிழர்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட யுத்தம் என்றும் இனவாதப் போக்காளர்கள் சிலரால் சுட்டிக்காட்டப்படுகின்றது.  எனவே, இந்த நிலைமையை மாற்றி அந்தச் சமாதிக்குத் துட்டகைமுனு மன்னன் எதிர்பார்த்த மரியாதையைச் செலுத்துமுகமாக நான் மேற்கூறிய ஏற்பாட்டினைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இந்த நாட்டில் தேசிய நல்லிணக்கத்தை வலுவுள்ளதாக எல்லாத் தரப்பினர் மத்தியிலும் கட்டியெழுப்ப வேண்டுமாயின் இவ்வாறான ஏற்பாடுகளைச் செய்தாகவேண்டிய கடமைப்பாடு இருக்கின்றதென்பதையும் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை விரும்புகின்ற அனைவரும் இதனை ஏற்றுக்கொள்வார்கள் என்பதையும் எதிர்பார்த்து எனது உரையை முடித்துக்கொள்கின்றேன் என வலியுறுத்தியுள்ளார்.

Untitled-6 copy

Related posts: