எம்மை திரும்பி பார்க்காத கட்சிகள் எமக்கு வேண்டாம்: நீங்களே தேவை – டக்ளஸ் எம்.பியிடம் பண்டிவிரிச்சான் மக்கள் !

தேர்தல் காலங்களில் எம்மிடம் வந்து வாக்குகளை பெற்றுச்சென்ற தமிழ்க்கட்சிகள் தமது வெற்றிகளை உறுதி செய்தபின்னர் எமது ஊரை திரும்பிப் பார்ப்பது கிடையது. அவர்களுக்கு எமது பண்டிவிரிச்சான் என்ற ஓர் இடம் இருப்பது கூட தெரியாதுள்ளனர். இத்தகையா போலி அரசியல்வாதிகள் எமக்கு வேண்டாம். உங்கள் கடந்த கால சேவைகளை நாம் நன்கு அறிவோம். இன்று நீங்கள் எமது பகுதிக்கு வந்துள்ளதானது எமக்கு புத்துணர்வையும் நம்பிக்கையையும் தந்துள்ளது என மன்னார் பண்டிவிரிச்சான் பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இன்றயதினம் மன்னார் மவட்டத்திற்கு வியஜம் மேற்கிண்ட செயலாளர் நாயகம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று மக்களத பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டார்.இதன்போதே இப்பகுதி மக்கள் இவ்வாறு தெவித்தனர்.
மேலும் அவர்கள் கூறுகையில்-
கடந்த நான்கரை ஆண்டுகளாக நல்லாட்சி என்ற நாடகமாடி எமது மக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஏமாற்றி வருகின்றனர். இவர்களது இந்த ஏமாற்று பொறிக்குள் இனி நம் வீழ்ந்துவிடப் போவதில்லை. தற்போது யாம் அதிகாரத்தை பெற்றால் எமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நாம் இனங்கண்டுள்ளோம்.
அந்த வகையில்தான் இம்முறை நாம் டக்ளஸ் தேவானந்தா என்ற மக்களின் தலைவனான உங்களை நாடிவந்துள்ளோம்.
இனி நாம் ஒருபோதும் அஞ்சப்போவதில்லை. எமக்கு உங்களூடாக சிறந்த எதிர்காலம் கிடைக்கும் என நாம் நம்புகிறோம் என்றனர்.
Related posts:
|
|