எம்முடன் கைகோர்க்கும் மக்கள் தலை நிமிர்ந்து வாழ்வர் – டக்ளஸ் எம்.பி தெரிவிப்பு!

Tuesday, October 29th, 2019

எங்களுடன் கைகோருங்கள் நாம் சிறந்த வழிகாட்டியாக இருந்து உங்களின் எதிர்காலத்தை வளமாக்கித்தருவோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கிளிநொச்சி கோரயன்கட்டு பகுதி மக்களுக்கு நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கோரயன்கட்டு மக்களது பிரச்சினைகளை ஆராயும் முகமாக குறித்த பகுதிக்கு என்ற செயலாளர் நாயகம் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்தபின் உரையாற்றுகையில் –

நாம் வாக்கு கேட்பது எமது நலன்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக அல்ல. மக்களின் நலன்களையும் அவர்களது பிரச்சினைகள் தேவைப்பாடுகளையும் தீர்ப்பதற்காககவே.

கடந்த காலங்களில் நாம் ஆட்சி அதிகாரங்களில் இருந்தபோது மக்களது தேவைப்படுகளை ஒரு தொலைபேசி அழைப்பினூடாக தீர்வுகளை பெற்றுக்கொடுத்திருந்திருக்கிறோம்.
ஆனால் தமிழ் மக்களின் அரியல் அதிகாரங்களை அலங்ககரிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்களின் அவலங்களை தீர்ப்பதற்கு முயற்சிக்காது அவற்றை தீரா பிரச்சினையாக வைத்திருக்கவே முயற்சிக்கின்றனர்.

மக்களின் அவலங்கள் தீர்க்கப்பட வேண்டுமானால் அவர்களது தேவைப்பாடுகள் நிறைவேறவேண்டுமானால் நாம் கூறும் வழிமுறையை நோக்கி என்னுடன் அணிதிரளுங்கள்.
வரவுள்ள ஜனாதிபதி தேர்தல் இதற்கான சிறந்த சந்தர்ப்பத்தை மக்களுக்கு வழங்கவுள்ளது.
அந்தவகையில் நாம் ஆதரவு தரக்கோரும் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச அவர்களுக்கு உங்களது வாக்குகளை வழங்கி வெற்றிபெறச் செய்யுங்கள். நாம் செய்வோம் செய்விப்போம் என்றார்.

Related posts:

நலன்புரி முகாம்களில் வாழும் மக்களின் உணர்வுகளுக்கு அரசாங்கம் மதிப்பளித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் ...
எக்ஸ்பிரஸ் பேர்ள் அனர்த்தம்: பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர்களுக்கு நஸ்டஈடு வழங்குவது தொடர்பில் அமைச்சர்...
கருணை மைந்தன் இயேசு பிரான் அவதரித்த நாளில் தேசமெங்கும் நித்திய ஒளி உண்டாகட்டும் – வாழ்த்துச் செய்திய...

நாம் தேர்தலில் போட்டியிடுவது ஆளவேண்டும் என்ற ஆசையிலல்ல: மக்கள் உரிமையோடு வாழவேண்டும் என்பதற்காகவே - ...
வடக்கில் திணைக்களங்களின் பிடியில் சிக்கிக் கிடக்கும் காணிகள் விடுவிக்கப்பட்டு விளை நிலங்களாக மாற்றப்...
மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுமாயின்அதனை மனிதாபிமான ரீதியாக அணுக வேண்டும் – அமைச்சர் டக்ளஸ் வலியு...