எம்மீது வைக்கும் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது – முல்லை வேணாவில் மக்கள் மத்தியில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Saturday, September 28th, 2019

உங்கள் வாழ்வில் மாற்றம் ஏற்படவேண்டும் என்பதற்காக நீங்கள் எம்மீ்து வைக்கும் நம்பிக்கை ஒருபோதும் வீண்போவதற்கு இடமளிக்க மாட்டோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு இன்றையதினம் (28.) விஜயம் மேற்கொண்டிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா முல்லைத்தீவு வேணாவில் பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

இது யுத்தத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட பகுதி. இங்குள்ள மக்கள் பட்ட துன்பங்கள் அனைத்தையும் நான் நன்கு அறிந்தவன். உங்கள் துன்ப துயரங்கள் அனைத்துக்கும் பரிகாரங்கள் காணப்படவேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அந்தவகையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களுகளை அவர்களது வாழ்வியலில் முழுமையாக மீண்டும் கட்டியெலுப்ப வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.

எமது மக்கள் உரிமைகளுடன் வாழ்வதற்காக அன்று ஜனநாயக வழிமுறையிலும் ஆயுத வழிமுறையிலும் போராடினால்கள். அவை வழிதவறிப் போனமையால் இன்று மீண்டும் ஜனநாயக வழிமுறையில் வீதிகளுக்கு இறங்கியுள்ளனர். இத்தகைய சூழ்நிலையை உருவாக்க யுத்தத்தை முன்னெடுத்தவர்களை விட அதற்கு தமது சுயநலன்களுக்காக ஊக்கமளித்தவர்களே காரணம்.

தமிழர் வரலாற்றில் ஆரம்பகாலங்களில் தீர்வுக்காக ஜனநாயக வழிமுறையில் போராடி உரிய தீர்வுகள் எட்டப்படாத நிலையில் ஆயுத வழிமுறையிலான போராட்டத்தை தெரிவு செய்து அதன் வழி போராடி தீர்வுக்கான முயற்சிகளை முன்னெடுத்திருந்த போதிலும் அவை தவறான வழிநடத்தல்களால் தோல்வி கண்டிருந்தது.
இந்நிலையில் அனைத்தையும் இழந்த எமது மக்கள் இன்று தாமாகவே தத்தமது பிரச்சினைகளுக்கான மீளவும் ஜனநாயக வழிமுறையில் வீதிகளுக்கு இறங்கி போராடுகின்றனர். இதுவே தமிழர்களின் இன்றைய நிலையாகிவிட்டது.
எமது மக்களின் இன்றைய நிலைக்கு மக்கள் தெரிவு செய்த தவறான தமிழ் தலைமைகளே காரணம் என்பது மட்டுமன்றி அவர்களது தவறான வழிநடத்தல்களே காரணமாக அமைந்து விட்டது என்றும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

குறிப்பாக எமது மக்களிடம் நடைமுறை சாத்தியமாகாத பல்வேறு வாக்குறுதிகளை வழங்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வடக்கு மாகாண சபையை கைப்பற்றியிருந்தனர் ஆனாலும் அதனைக் கொண்டு எதனையும் அம்மக்களுக்கு பெற்றுக் கொடுத்திருக்கவில்லை.
வடக்கு மாகாண சபை தேர்தல் வெற்றி பெற்றதன் பின்னர் தமிழர் ஆட்சி மலர்ந்தது என்றனர். அதன் பின்னர் நல்லாட்சியை கொண்டுவந்டதுள்ளோம் தீர்வு கையிலிருக்குதென்றனர். அனைத்தும் தேர்தல் கோசங்களாக இருந்துவிட்டு போயினவே தவிர எமது மக்களுக்கு எதனையும் அவர்கள் பெற்றுக்கொடுத்திருக்கவில்லை. அவர்களைத் தெரிவு செய்த மக்கள் இன்று பாவப்பட்ட நிலைமையில் இருக்கின்றார்கள் .

ஆனால் நாம் ஒருபோதும் அரசுகளையோ அன்றி பிற தரப்பினரையோ குற்றம் சொல்லியது கிடையாது. எது வாக்குறுதிகளுக்கு நாங்களே பொறுப்பானவர்கள். நாம் கொடுத்த வாக்குறுதிகள் என்றும் செயல்முதுறையில் முன்னெடுக்கப்படாது போகவில்லை. நாம் சொல்லும் ஒவ்வொன்றும் நடைமுறையில் நடைபெற்று வருகின்றன. இதுவே கடந்த கால வரலாறு.
அந்தவகையில் தற்போது ஜனாதிபதி தேர்தல் எமது மக்களிடம் வந்துள்ளது. இந்த தேர்தல் தமிழ் மக்களுக்கு ஒரு முக்கிய திருப்புமுனையை வழங்கும் சந்தர்ப்பத்தை கொடுக்கும் என நினைக்கின்றேன்.
கடந்த நாலரை ஆண்டுகளாக நல்லாட்சிக்கு முண்டு கொடுத்தவர்கள் தமிழ் மக்களை மேலும் நடுத் தெருவில் விட்டுள்ளனரே தவிர தீர்வுகளையும் அபிவிருத்தியையும் பெற்றுக்கொடுப்பதற்கான எச்செயற்பாட்டையும் வலியுறுத்தியிருக்கவில்லை.
நாம் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது இராணுவ பிடிக்கள் இருந்த காணிகள் போராளிகள் அரசியல் கைதிகள் உள்ளிட்ட பிரச்சினைகளை எதிர்கொண்டவர்களுக்கு கணிசமான தீர்வுகளை பெற்றுக்கொடுத்திருந்திருக்கின்றோம்.
ஆனால் இன்று?
அதுதான் நான் உங்களிடம் கோருகின்றேன் என்னை நம்புங்கள். உங்களின் அரசியல் அதிகாரங்களை எங்களிடம் தாருங்கள் நாம் நீங்கள் எதிர்பார்க்கும் அபிலாசைகளுக்கு தீர்வுகளை பெற்றுத்தருகின்றோம் என்றார்.

Related posts:

தகுதிகாண் அடிப்படையில் பதவி உயர்வுகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க முடியாதா? - அமைச்சர் அர்ஜூன ரணது...
நீர்கொழும்பு களப்பு அபிவருத்தி திட்டத்தை நிறைவு செய்வதற்கு தடையாக உள்ள காரணிகளை அகற்றுவது தொடர்பில் ...
நீர்கொழும்பு களப்பு அபிவிருத்தி பிரச்சினைகளுக்குதுரித தீர்வை பெற்றுக் கொடுக்க அமைச்சர் டக்ளஸ் நடவடிக...

பளைப் பகுதியில் தென்னை பயிர்ச் செய்கைச் சபையினால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் அம் மக்களுக்கு மீள வழங்...
ஐ.தே.மு - கூட்டமைப்பு கூட்டாட்சியில் யாழ்ப்பாணத்திற்கு அநீதி: விசாரணைக்கு அமைச்சரவையில் தீர்மானம் அம...
கிழக்கின் நீர்வேளாண்மை சார்ந்த அபிவிருத்தியை விரைவுபடுத்தும் நோக்கில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால...