எம்மீது சுமத்தப்பட்டுவந்த பழிகளுக்கு பதில்களை காலத்திடம் ஒப்படைத்தோம். காலம் எம்மை ஏமாற்றிவிடவில்லை – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

தேசிய நல்லிணக்கத்தை இந்த நாட்டில் வலுவுள்ளதாக – அர்தமுள்ளதாகக் கட்டியெழுப்புவதில் நாம் மிக அதிகமாகவே உழைத்திருக்கின்றோம். அதனால், பலவற்றை இழந்திருக்கின்றோம். எம்மீது பல்வேறு பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்துவதற்கும், சேறு பூசுவதற்கும், அவதூறுகளைப் பரப்புவதற்குமான வாய்ப்புகளை, சுயலாப எதிர்த் தரப்பு தமிழ் அரசியல்வாதிகளுக்கும், மத்தியில் எதிர்க்கட்சியாக மாறுகின்ற கட்சிகளின் சிலருக்கும் எமது இந்த தேசிய நல்லிணக்கம் நோக்கிய வழிமுறையே வழங்கியிருந்தது. அதற்காக நாம் அயர்ந்துவிடவில்லை. அதைரியப்படவில்லை. அத்தகைய பழிகளை நாம் கணக்கிலும் எடுக்காமல், எம்மிடம் காலம் ஒப்படைத்திருந்த எமது மக்களின் நலன்சார்ந்த பணிகளை அயராது முன்னெடுத்தோம். எம்மீது சுமத்தப்பட்டுவந்த வந்த பழிகளுக்கு பதில்களை காலத்திடம் ஒப்படைத்தோம். காலம் எம்மை ஏமாற்றிவிடவில்லை – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் தெரிவிததுள்ளார்.
மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள், மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு, சிறைச்சாலை மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சு, தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சு, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு, உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்;ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
இன்று பதில் சொல்லிக் கொண்டிருக்கின்றது. அன்று, எம்மீது கூட்டு சேர்ந்து பழி சுமத்தியவர்கள் இன்று சுயலாபத்தினை இலக்காகக் கொண்ட பதவிகளுக்காகவும், அதிகாரங்களுக்காகவும் பிரிந்து சென்று கொண்டிருக்கின்றார்கள். நாங்கள் எமது மக்களுக்காக உழைத்துக் கொண்டிருக்கின்றோம். இதுதான் அவர்களுக்கும், எமக்கும் இடையில் உள்ள வித்தியாசம்.
எமது மக்களுக்காகவே நாங்கள் தேர்தல்களில் போட்டியிடுகின்றோம். எமது மக்களின் நலன் கருதியே கிடைக்கின்ற அரசியல் அதிகாரங்களைப் பயன்படுத்துகின்றோம். சுயலாப அரசியல் கருதி நாங்கள் செயற்பட்டிருந்தால், எப்போதோ நாங்களும் இனவாதத்தினை கையில் எடுத்திருப்போம். போலி தமிழ்த் தேசியம் பேசியிருப்போம். அதி தீவிரமாகப் பேசி இருப்போம்.
எமக்கு அதில் நம்பிக்கை இல்லை. நாங்கள் இடதுசாரி அரசியல் கொள்கை வழி ஏற்றவர்கள். கொள்ளை வழிகளை ஏற்றவர்கள் அல்லர். வாக்குக் கொள்ளையானாலும் சரி, வேறு எந்தக் கொள்ளையானாலும் சரி, அது எமது வழியல்ல.
Related posts:
|
|