எம்மால் முன்னெடுக்கப்பட்ட பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையே மக்கள் விரும்புகிறார்கள்!

Saturday, December 23rd, 2017

யாழ்.மாநகரபை எமது ஆளுகைக்குள் இருந்தபோது எம்மால் முன்னெடுக்கப்பட்ட பணிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படவேண்டும் என்பதையே மக்கள் விரும்புகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு அனைவரும் மாநகரசபையை வென்றெடுக்கும் நோக்கைக் கரத்தில் கொண்டு ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் யாழ்.மாநகரசபை வேட்பாளர்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

யாழ்.மாநகரசபையை கடந்தகாலங்களில் நாமே எமது ஆளுகையில் வைத்திருந்தோம். அப்போது யாழ்.மாநகரை மட்டுமல்லாது அதனைச் சூழவுள்ள பகுதிகளில் முடியுமானவரைக்கும் பல்வேறு பணிகளை முன்னெடுத்திருந்தோம்.

ஆனாலும் பலவேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் சந்தர்ப்பங்களில் அதன் ஆட்சிக்காலம் நிறைவடைந்திருந்த நிலையில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படமுடியாது போனமையானது ஒரு துரதிஸ்ரவசமானதாகவே எண்ணமுடிகின்றது. எனவே வர இருக்கின்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் யாழ்.மாநகரசபையை நாம் மீண்டும் கைப்பற்றி மக்கள் நலன்சார்ந்த பணிகளை தொடர்ச்சியாக முன்னெடுப்பதற்கு வேட்பாளர்களாகிய நீங்கள் ஒவ்வொருவரும் திடசங்கற்பம் பூணவேண்டும். அதற்காக ஒன்றிணைந்து உழைக்கவும் வேண்டும். அவ்வாறு எல்லோருடைய பங்களிப்புடனும் ஒத்துழைப்புடனும் யாழ்.மாநகரசபையை கைப்பற்றி அதனூடாக மாநகரசபை வளாகத்தை அழகுபடுத்துவதுடன் அபிவிருத்தியால் முன்னேற்றங்காணச் செய்யும் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் உழைக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இதன்போது கட்சியின் யாழ்.மாவட்ட நிர்வாக செயலாளர் கா.வேலும்மயிலும் குகேந்திரன், கட்சியின் யாழ்.மாநகர பிரதேச நிர்வாக செயலாளர் றீகன், யாழ்.மாநகர முன்னாள் மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலர் உடனிருந்தனர்.

Related posts: