எமது வாழ்வே கேள்விக்குறியான போது அதனைப் பாதுகாத்து  நம்பிக்கையூட்டியவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே – எழுவைதீவு மக்கள் புகழாரம்!

Thursday, January 18th, 2018

எமது வாழ்வே கேள்விக்குறியான போது எமக்கான வாழ்வை உறுதி செய்து அதனைப் பாதுகாத்து நம்பிக்கையூட்டி இற்றைவரை  எம் வாழ்வுக்கு ஆதாரமாக இருப்பவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே என்றும் அந்த வகையில் எம் வாழ்வில் அவரது சேவைகளை ஒருபோதும் மறக்கப்போவதில்லை என்று எழுவைதீவு மக்கள் புகழாராம் சூடியுள்ளனர்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு தீவகத்தின் எழுவைதீவு பிரதேசத்தில்  போட்டியிடும் கட்சியின் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்களுடனான சந்திப்புக்களை மேற்கொள்ளும் பொருட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா இன்றையதினம் (19)  விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார். இதில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

1990 களின் ஆரம்பத்திலிருந்து தீவக மக்களின் நலன்களுக்காக அதிக அக்கறையுடன் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் செயற்பட்டுவருகின்றார்.

தனக்குக் கிடைக்கப்பெற்ற அரசியல் வாய்ப்புகளைப் பயன்படுத்தி அதனூடாக எழுவைதீவு மட்டுமன்றி தீவகத்தின் எல்லாப் பகுதிகளையும் பல்வேறு அபிவிருத்தியால் தூக்கி நிறுத்தி எமக்கு வாழ்வளித்தார். குறிப்பாக கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வீதிப்புனரமைப்பு, மின்சாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளை எமக்காகப் பெற்றுக்கொடுத்து மாபெரும் சேவையை இந்த மகத்தான மனிதரே செய்து முடித்துள்ளார்.

அதுமாத்திரமன்றி இங்கு வாழும் நாம் ஒவ்வொருவரும் கடற்றொழிலையும் விவசாயத்தையும் எமது வாழ்வாதாரமாக கொண்டுள்ள நிலையில் அதற்கேற்றவகையில் அதற்கான திட்டங்களை வகுத்து எமக்கு இற்றைவரை பேருதவி செய்துவருகின்றார்.

கடந்தகாலங்களில் ஊர்காவற்றுறை பிரதேச சபையை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வென்றெடுத்ததன் மூலம் நாம் பல அபிவிருத்திகளைக் கண்டிருந்தோம். எனவே விட்ட குறையில் தொட்ட குறையாக உள்ள ஏனைய அபிவிருத்திகளையும் பூர்த்திசெய்ய வேண்டுமாயின் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் மக்களாகிய நாம் ஒன்றிணைந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றியை உறுதி செய்வோம் என அங்கு கூடியிருந்த மக்கள் சம நேரத்தில் தமது கைகளை உயர்த்தி தமது ஏகோபித்த ஆதரவை தெரிவித்துள்ளமை விஷேட அம்சமாகும்.

இதன்போது கருத்துத் தெரிவித்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உங்களது வாக்குகளூடாக நாம் கடந்த காலங்களில் ஊர்காவற்றுறை பிரதேச சபையை வெற்றிகொண்டு அதனூடாக பல்வேறு அபிவிருத்திகளை அரச நிதிகளினூடாக செய்து முடித்தது மட்டுமல்லாது விஷேட நிதிகளைக் கொண்டு ஊர்காவற்றுறை வேலணை மற்றும் நெடுந்தீவு பிரதேசங்களிலும் பல மக்கள் நலன்சார்ந்த திட்டங்களை முன்னெடுத்துள்ளோம்.

எனவே வரும் சந்தர்ப்பத்தை மக்கள் எமது கட்சியின் வீணைச் சின்னத்தின் வெற்றிக்காக ஒன்றிணைந்து ஆதரவை தருவீர்களேயானால் நிச்சயமாக மேலும் பல அபிவிருத்திகளை நாம் முன்னெடுக்கத் தயாராக இருக்கின்றோம் என தெரிவித்ததுடன் இந்தப் பகுதியின் அபிவிருத்திக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி எப்போதும் பக்கதுணையாக இருக்கும் என்றும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

 

Related posts:

தமிழர் உரிமைக்காக உயிர் நீத்த அனைவரது தியாகங்களும் ஈடேறவேண்டும் - முள்ளிவாய்க்காலில் டக்ளஸ் தேவானந்த...
வடக்கு போக்குவரத்து சபைகளில் இடம்பெற்ற பதவி உயர்வு முறைகேடுகள் இன்னமும் உரியவாறு விசாரிக்கப்படவில்லை...
பெண்களை தலைமைத்துவமாக கொண்ட குடுப்பங்களின் மேம்பாட்டிற்கு விஷேட திட்டம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ...

வறிய மக்களது வாழ்வியல் எழுச்சிக்கு நிச்சயமாக நாம் உறுதியுடன் கரம்கொடுப்போம் – டக்ளஸ் தேவானந்தா !
எமது மக்களுக்குப் பாதி ப்பினையும் இந்தியா வுடனான முரண்பாட்டையும் ஏற்படுத்தும் வகையில் இலங்கை அரசு நட...
யுத்தத்தால் பாதிப்படைந்த மக்களுக்கும்  புனர்வாழ்வு பெற்றவர்களுக்கும் விசேட நிதித்திட்டம் வேண்டும் - ...