எமது மாணவர்களுக்குச் சென்றடையக்கூடியதான கல்வி வாய்ப்புக்கள் சிதைக்கப்படுகின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

எமது நாட்டில் கல்விச் செயற்பாடுகள் தொடர்பில் ஏற்படுத்தப்படுகின்ற பல்வேறு இடையூறுகள் காரணமாக, எமது மாணவர்களுக்கு சென்றடையக்கூடியதான தற்போதைய கல்வி முறைமையின் வாய்ப்புகள் சிதைக்கப்பட்டுள்ளன – என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிததுள்ளார்.
இன்றைய தினம் கல்வி, விளையாட்டுத்துறை மற்றும் உள்ளக அலுவல்கள், வடமேல் அபிவிருத்தி, கலாசார அலுவல்கள் ஆகிய அமைச்சுக்கள் தொடர்பிலான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலம் தெரிவிக்கையில் –
குறிப்பாக அரசியல் தலையீடுகள் ஆசிரியர் தெரிவு முறையில் முரண்பாடுகள். ஊழல், மோசடி, வீண்விரயங்கள், து~;பிரயோகங்கள். கற்பித்தல் முறையில் நவீனத்துவத்திற்கான வாய்ப்புகளின்மை. பரீட்சைகளை மையப்படுத்திய கல்விக் கொள்கை. ஆன்மீகம், பண்பாடு, வரலாறு போன்றவை கல்வி முறைமையில் புறக்கணிக்கப்படுகின்றமை அல்லது திரிபுபடுத்தப்படுகின்றமை. போன்ற காரணிகள் பொதுவாகவே எமது மாணவர்களுக்குரிய கல்;விக்கான வாய்ப்பினை ஒழுங்குறப் போய்ச் சேராததற்கான காரணிகளாகக் கூறப்படும் நிலையில், எமது நாட்டினது சமூக மட்டத்தில்,
வறுமை காரணமாக மாணவப் பருவத்தினர் உழைப்பில் ஈடுபடுகின்ற பொருளாதார நிலைமை வளரா சமூக ஒடுக்கு முறைகள் மற்றும் இன ரீதியலான புறக்கணிப்புகள் காரணமாக கல்விக்கான போதிய வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றமை.
பண்பாட்டு, கலாசார அடிப்படையில் தவறான பார்வைகள், கோளாறுகள் காரணமாக கல்வியைத் தொடர இயலாமல் இடைநடுவில் விலகல். போன்ற காரணிகளும், தவறான கல்விக் கொள்கை காரணமாக கல்வியைத் தொடர இயலாமை மற்றும் உயர் கல்வி மறுக்கப்படும் நிலைமை எனக் காரணிகள் தொடருகின்றன.
இத்தகைய தடைகள் இனங்காணப்பட்டு, அவை தகர்த்து எறியப்படும் வரையில் எமது கல்வித் திட்டமானது எமது மாணவர்களுக்கு ஒழுங்கான பயனைத் தர மாட்டாது என்ற கருத்தே எமது சமுதாய மட்டத்தில் நிலவி வருகின்றது – என்றார்.
Related posts:
|
|