எமது மண்ணில் டக்ளஸ் தேவானந்தா காலடி வைத்த நாள் நெடுந்தீவுக்கு மட்டுமல்ல தீவகத்திற்கே ஒளிபிறந்த நாள்!

Friday, February 2nd, 2018

டக்ளஸ் தேவானந்தா அவர்களது பாதம்பட்ட பின்னரே நெடுந்தீவு மண் ஒளிபெற்றதாக நாம் இற்றைவரை எண்ணிப் பெருமைப்படுகின்றோம் என முன்னாள் கல்விப் பணிப்பாளர் அரசரட்ணம் தெரிவித்துள்ளார்.

நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு நெடுந்தீவு தேவா அரங்கில் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

1991 ஆம் ஆண்டு கிறிஸ்து பாலகன் பிறப்பை கொண்டாட உலக மக்கள் தயாராகி வந்த நிலையில்  நெடுந்தீவு மக்கள் மட்டும் அவலங்களைச் சுமந்த நிலையில் துன்பத்திலும் துயரத்திலும் துவண்டு கிடந்தனர்.

அத்தினத்தன்றுதான் நெடுந்தீவு மண்ணில் டக்ளஸ் தோவானந்தா என்ற மாபெரும் தலைவன் தன் கால்பதித்து நின்றது மட்டுமல்லாது பசியோடும் களைப்போடும் வாடியிருந்த எமக்கு உணவளித்து மறுவாழ்வளித்த உன்னத தலைவனாகவும் மிளிர்ந்து நின்றார் எங்கள் தலைவர் டக்ளஸ் தேவானந்தா.

அவர் இந்த மண்ணில் காலடி எடுத்து வைத்த நாள் என்பது நெடுந்தீவுக்கு மட்டும் ஒளிபிறந்த நாள் என்பதை விட தீவகத்திற்கே ஒளிபிறந்த நாளாகத்தான் நாம் கருதுகின்றோம்.

அவர் இதர தமிழ் தலைமைகள் போன்று எம்மை கைவிட்டு நெடுந்தீவுக்கு வருகை தந்திருக்காது விட்டிருந்தால் எமது வாழ்வு என்றோ கருகிப் போயிருக்கும்.

ஆனால் அவர் எமது நெடுந்தீவுப் பகுதிக்கு வந்தது மட்டுமன்றி எமது பகுதிகளை அபிவிருத்தியால் கட்டி எழுப்பியதுடன் பல இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களையும் வாழ்வாதார உதவிகளையும் பெற்றுத்தந்தது மட்டுமல்லாது  இன்னும் பல்வேறு வகைகளிலும் எமது பகுதிக்கு பேருதவி புரிந்துள்ளார்.

அந்தவகையில் வருகின்ற  காலங்களிலும் அவரது பணி எமது பகுதியில் மேலும் தொடரும் என்ற நம்பிக்கை எமக்குள்ளது. எனவே மக்கள் ஏமாற்றுக்காரரை புறந்தள்ளி எதிர்கால சந்ததிக்கு வழிகாட்டக்கூடிய டக்ளஸ் தேவானந்தாவின் வீணைச் சின்னத்தை ஆதரித்து பெருவெற்றிபெறச் செய்யுங்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts:

தமிழ் மக்களின் அரசியலுரிமைக்கான குரல் தேசிய இனத்தின் நீதிக்கான குரல்! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவான...
நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மக்களது வாழ்வாதாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்! - டக்ளஸ் தேவானந்தா...
கடற்றொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதுபோல் விவசாயத் துறையில் ஈடுபடும் மக்களுக்கும் மானிய விலையில் மண்ணெண...