எமது மக்கள் வன விலங்குகளுடன் போராடும் நிலை வரக்காரணம் என்ன?  – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Wednesday, May 23rd, 2018

தொல்பொருள் மிகை கொண்ட அடர்த்தியான அனுராதபுரப் பகுதிகளை டோசர் இயந்திரங்கள் கொண்டு நாசப்படுத்திவிட்டு, தவறு நடந்துவிட்டதாக கூறிக் கொள்ளும் நீங்கள், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்பொருள் என்ற பெயரில் பல்வேறு இடங்களை மறைத்து, தடுத்து வைத்திருக்கிறீர்கள் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய சூழல் சட்டத்தின் கீழான 7 கட்டளைகள் தொடர்பில் நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார் –

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

இதே போன்று, பாதுகாக்கப்பட்ட வனப் பகுதிகள் எனப் பெயரிட்டுள்ள பல வனங்களிலிருந்து பாரியளவில் மரங்கள் வெட்டப்பட்டு, கடத்தப்படுகின்றன. இந்த நிலையில் நாட்டின் வன அடர்த்தியை அதிகரிக்கப் போவதாகக் கூறுகிறீர்கள்.

வனங்கள் அழிக்கப்பட்டு, இன்று பல மாவட்டங்களில் மக்கள் அன்றாடம் வன விலங்குகளுடன் போராடிக் கொண்டே வாழ வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றது. அதுமட்டுமல்லாது, விவசாய செய்கைகள் நாளாந்தம் பாரியளவில் அழிக்கப்பட்டு வருகின்றன.

சூழலைப் பாதுகாப்பதற்கு மரக் கன்றுகள் நடுவதாகக் கூறி, ஆயிரக் கணக்கில் நடப்பட்டாலும், நாட்டிய பின்னர் அவற்றைப் பராமரிப்பதற்கு எவருமின்றி, அவை கருகியும், கால்நடைகளுக்கு உணவாகியும் மறைந்து விடுகின்றன.

அடர்ந்த பாதுகாப்பு வனங்களில் எல்லாம் மரங்களை வெட்டிக் கொண்டு, எமது பகுதிகளில் எமது மக்களது வாழ்வாதார, குடியிருப்பு பகுதிகளை எல்லாம் வன இலாக்காவுக்குச் சொந்தமானவை என எல்லைகள் இடுகின்ற பரிதாப நிலையைக் காணக்கூடியதாகவுள்ளது என தெரிவித்தார்

 

Related posts:

வெளிநாடுகளுடன் செய்து கொள்ளப்படும் உடன்படிக்கைகள் தொடர்பில் எமது மக்களுக்கு தெளிவுற அறிவுறுத்த வேண்...
மக்கள் நலத்திட்டங்களை முன்னெடுத்தால் அதை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி ஆதரிக்கும் - டக்ளஸ் தேவானந்தா எம்....
செலவுகளுக்கு ஏற்ப மக்களுக்கு பயன்களும் கிடைக்க வேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!