எமது மக்கள் திசை மாறிச் செல்வதை அனுமதிக்க முடியாது -அமைச்சர் டக்ளஸ்!

வன்முறைகளில் ஈடுபட்டு எமது மக்கள் திசை மாறிச் செல்வதை அனுமதிக்க முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கடந்த கால அனுபவங்களை படிப்பினையாகக் கொண்டு எதிர்காலத்தில் செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி, சிவபுரம் பிரதேச மக்களுக்கு காணி உறுதிப் பத்திரங்களை வழங்கி வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், பல்வேறு பிரதேசங்களில் வாள் வெட்டு உட்பட்ட வன்முறை சம்பவங்கள் அண்மைக் காலமாக இடம்பெறுவதாக தகவல்கள் கிடைப்பதாக தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அவற்றை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸாருடனும் இராணுவத்தினருடனும் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். – 15.12.2021
Related posts:
இலங்கை தமிழரசுக் கட்சிக்கு ஊழல்கள் மோசடிகள் தொடர்பில் பிரேரணை கொண்டுவருவதற்கு அருகதை இருக்கிறதா – நா...
கிளிநொச்சி வைத்தியசாலையில் தீ விபத்து - நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்ட அமைச்சர் தேவானந்தா!
அமைச்சர்களான டக்ளஸ் மற்றும் ரமேஸ் பத்திரன பங்களிப்புடன் யாழ்ப்பாணத்தில் கைத்தொழில் கண்காட்சி ஆரம்பம்...
|
|