எமது மக்கள்படும் அவலங்களுக்கு பரிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே எமது நோக்கம் – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

எமது மக்களின் கண்ட உயிரிழப்புக்களுக்கும், சொத்து இழப்புக்களுக்கும், தற்போது வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையானது போதுமானதாக இல்லை ஆனாலும் எமக்கு கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை எமது மக்களுக்கானதாக பயன்படுத்தவேண்டும் என்பதே எமது நோக்கமாகும். அந்தவகையில் அதற்கான அனைத்து செய்றபாடுகளையும் நான் மேற்கொண்டு வருகின்றேன் என மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கு அபிவிருத்தி மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
வன்முறைகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சேவை வழங்கும் நிகழ்சி திட்டத்தை யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் கல்லூரிய மண்ணபத்தில் ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில் –
யாழ் மாவட்டத்தை பொறுத்தளவில் 545 பேர் இந்த இழப்பீட்டை பெற்றுக்கொள்ள இதுவரை விண்ணப்பித்துள்ளர். ஆனாலும் இவர்களுக்கான இழப்பீடுகள் உரிய காலத்தில் வழங்கப்படவில்லை. ஏனெனில் இவ்வாறு விண்ணப்பித்தவர்களது தொடர்புகள் உரியமுறையில் கிடைக்காமல் போனதும் ஒரு காரணமாக உள்ளது.
அந்தவகையில் பாதிக்கப்பட்டவர்களது தொடர்புகள் கிடைத்ததும் அதை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கும் பொருட்டு அது தொடர்பில் விபரங்களை சேகரிப்பதே இந்த நிகழ்வின் நோக்கமாகும்.
தற்போது வழங்கப்பட்டுவரும் இந்த இழப்பீடுகள் எமது மக்களுக்கு போதுமானதாக அமையவில்லை என்பது எமக்கு நன்கு தெரியும். ஆனாலும் நாட்டில் ஏனைய மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் இழப்பிடுகள் எவ்வாறானதாக உள்ளதோ எவ்வாறான இழப்பீட்டு தொகை கிடைக்கப்பெறுகின்றதோ அத்தகைய தொகையை எமது மக்களுக்கும் பெற்றுக் கொடுக்க நிச்சயம் நடவடிக்கை எடுப்போன்.
அந்தவகையில் கிடைக்கப்பெறுகின்ற ஒவ்வொரு கணப்பொழுதையும் எமது மக்களுக்கான தேவைகளுக்காக மன்னெடுக்கவேண்டும் என்பதே எனது நோக்கம். அதை நான் ஒருபோதும் எனது சுயநலத்திற்காக பயன்படுத்தப் போவதில்லை.
அந்தவகையில் இந்த விடயம் தொடர்பாக மக்களாகிய உங்களுக்கு அரச அதிகாரிகள் வழிகாட்டுதலுக்காகவும் ஆலோசனைகளை வழங்குவதற்காகவும் உள்ளனர். அத்துடன் இதுவரை இழப்பீடுகளை பெற்றுக்கொள்ள விண்ணப்பிக்காதவர்களும் இன்றையதினம் விண்ணப்பித்து எதிர்காலத்தில் தமக்கான இழப்பீடுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன்போது யாழ் மாவட்ட அரச அதிபர் வேதனாயகன், மற்றும் அமைச்சின் இணைப்பாளரும் கட்சியின் ஊடகச் செயலாளருமான தோழர் ஸ்ராலின், அமைச்சின் வடமாகாண இணைப்பாளரும் கட்சியின் யாழ் மாவட்ட நிர்வாக செயலாளருமான கா வேலும்மயிலும் குகேந்திரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
Related posts:
|
|