எமது மக்களுக்கு இனியும் ஏமாற்றங்கள் வேண்டாம்: சுழிபுரத்தில் டக்ளஸ் எம்.பி.தெரிவிப்பு!

Wednesday, November 6th, 2019

நீண்டகாலமாக தமிழ் அரசியல் தலைமைகளால் ஏமாற்றப்பட்டு வரும் தமிழ் மக்கள் இனிபொருதடவை ஏமாராமல் இருக்க வேண்டும் என்பதே எமது எமது எதிர்பார்ப்பாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

சுழிபுரம் பெரியபுலவு பகுதி மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில் –

நீண்டகாலமாக எமது மக்கள் பல துன்ப துயரங்களுக்கு ஆளாகி வாழ்ந்துவரும் நிலையில் அவர்களது வாழ்வியலை மேம்படுத்த வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு நினைகவில்லை.

ஆனால் அவர்கள் உங்களது அவலங்களை வைத்து தமது அரசியல் இருப்பை பாதுகாத்துக் கொள்ளவே முயற்சிக்கிறார்கள்.

அத்துடன் இவர்களது தேசியம் என்ற சுயநல அரசியலுக்குள் எமது மக்கள் நீண்டகாலம் சிக்கி வெளியேறாது இருந்தமையும் இத்தகைய அவலங்களுக்கும் காரணம்.

ஆனால் நாம் அது மக்களை சிறந்த வாழ்வாதாரத்துடன் வாழவைக வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அதற்காக கடந்த காலங்களில் கிடைத்த சந்தர்ப்பங்களையும் சரியாக பயன்படுத்தி இருக்கின்றோம்.

அந்தவகையில் வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் கோட்டபயவின் வெற்றியில் நீங்கள் பங்காளர்களாகி வெற்றிபெற செய்யுங்கள்.

அந்த வெற்றியூடாக நான் கடந்த காலத்தில் முன்னெடுத்துச்சென்ற சேவைகளை முன்னெடுப்பதோடு உங்கள் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாசுகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருகின்றேன் என்றார்.

அந்த வெற்றியூடாக நான் கடந்த காலத்தில் முன்னெடுத்துச்சென்ற சேவைகளை முன்னெடுப்பதோடு உங்கள் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாசுகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுத்தருகின்றேன் என தெரிவித்த அவர் தமிழ் தேசிய கூட்டமைப்பினரது அரசியல் மாயைக்குள் வீழ்ந்துவிட மாட்டார்கள் என தான் நம்புவதுடன் வரவுள்ள ஜனாதிபதி தேர்தலில் கோட்டபய ராஜபக்ச அவர்களை வெற்றியடைய செய்வதில் நீங்களும் பங்காளர்களாவதனூடாக உங்கள் ஒவ்வொருவரது தேவைப்பாடுகளும் அபிலாசைகளும் தீர்வுகாண்பதற்காணப்படும் என்றார்.


டெங்கு நோயிலிருந்து வடக்கு மக்களை பாதுகாக்க விசேட திட்டம் உருவாக்கப்படவேண்டும் - நாடாளுமன்றில் டக்ளஸ...
இனசமூகங்களிடையேயான நம்பிக்கை சிதைக்கப்படுகின்றன - நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
மக்கள் வாய்ப்புத் தராவிட்டால் அரசியலிலிருந்து ஒதுங்குவேன்  - டக்ளஸ் எம்.பி. திட்டவட்டம்!
ஆட்சியில் தொடர்ந்திருந்தால் சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனத்தை பெற்றுத் தந்திருப்பேன் - செயல...
நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப எவரும் அக்கறை கொள்ளவில்லை – டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!