மக்களுக்கான எமது பெரும்பணிகளை கடந்த கால வரலாறுகள் சான்று பகிர்கின்றன – அராலியில் டக்ளஸ் தேவானந்தா!

Monday, November 6th, 2017

மக்களுக்கு முழுமனதுடன் சேவையாற்றும் ஆற்றலும் அக்கறையும் எம்மிடமே உள்ளது என்பதை கடந்த கால வரலாறுகள் சான்று பகிர்கின்றன என ஈ.பி.டி.பி டக்ளஸ் தேவானந்தா அராலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் ஆட்சியில் நாம் இப்போது பங்கெடுக்காது விட்டாலும் எதிர்க்கட்சி ஆசனத்தில் இருந்த போதிலும் எமது மக்களுக்கான தேவைகளை இனங்கண்டு அவற்றை தீர்த்து வைப்பது தொடர்பில் நாடாளுமன்றில் தொடர்ச்சியாக குரல் கொடுத்து தீர்வு கண்டு வருகின்றோம்.

ஆனால் மக்களின் வாக்குகளை தேசியம் பேசி அபகரித்து கொண்டவர்கள் பேசா மடந்தைகளாகவே இருந்து வருகின்றனர்.

நாம் எப்போதும் சவால்களுக்கும் இடர்பாடுகளுக்கும் முகம் கொடுத்து மகக்ளுக்கான தேவைகளை முன்னெடுப்பதில் மிகுந்த அவதானத்துடன் இருக்கின்றோம்.

அது மட்டுமன்றி அதற்கான ஆற்றலும் அக்கறையும் எம்மிடம் உள்ளது. அந்த வகையில் மக்கள் எம்மை தமது அரசியல் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் எமது சேவைகளை நாம் அயராது முன்னெடுப்பதற்கு தயாராகவே இருக்கின்றோம் என்றும் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டினார்.

இதன்போது மக்கள் வீதி புனரமைப்பு, குடிநீர் பெற்றுக் கொள்வதில் ஏற்படும் இடர்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக டக்ளஸ் தேவானந்தாவின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.

இதனடிப்படையில் தீர்வுகள் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

இம் மக்கள் சந்திப்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ் மாவட்ட உதவி நிர்வாகச் செயலாளர் சிவகுரு -பாலகிருஸ்ணன் (ஜீவன்)  கட்சியின் வலிகாமம் மேற்கு நிர்வாகச் செயலாளர் செல்வகுமார் ஆகியோர் உடனிருந்தார்.

Related posts: