எமது பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தாருங்கள் – பளை நகரப் பகுதி வர்த்தகர்கள் டக்ளஸ் எம்.பி.யிடம் கோரிக்கை!

Saturday, January 13th, 2018

பளை நகரப்பகுதியில் உள்ள ஒருதொகுதி வர்த்தக நிலையங்களுக்கு சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வர்த்தகர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகக் கேட்டறிந்துகொண்டார்.

பளை பகுதிக்கு இன்றையதினம் (13) விஜயம் மேற்கொண்டிருந்த செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பளை நகர்பகுதியிலுள்ள வர்த்தக நிலையங்களுக்கு சென்று வர்த்தகர்களுடன் சந்தித்து அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பில் ஆராய்ந்தறிந்து கொண்டுள்ளார்.

இதன்போது வர்த்தகர்கள் பல்வேறு பிரச்சினைகள் குறிப்பாக தாம்  நாளாந்தம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் சந்தைப் பகுதியில் மின்சார வசதிகளோ அன்றி மலசலகூட வசதிகளோ இன்மையால் பல அசௌகரியங்களை எதிர் கொள்ளவேண்டியுள்ளதாகவும் தெரிவித்திருந்ததுடன் மின்சாரம் இன்மையால் சந்தைப் பகுதியில் சிலர் இரவு நேரங்களில் மதுபானம் அருந்துவது உள்ளிட்ட சமூக விரோத செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதால் நாளாந்தம் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலை ஏற்படுவதாகவும்  டக்ளஸ் தேவானந்தாவிடம் தெரிவித்திருந்ததுடன் தமது பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளைப் பெற்றுத்தருமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.

வர்த்தகர்களது பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்ட செயலாளர் நாயகம் உரிய கவனம் செலுத்தப்படும் என்றும் பிரச்சினைகள் மற்றும் தேவைப்பாடுகளுக்கு வரவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலை சரியான முறையில் பயன்படுத்தி எமது வீணைச் சின்னத்தை வெற்றிகொள்ள வைப்பதனூடாக  இலகுவான முறையில் தீர்வுகாண முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.


நெடுந்தீவில் பணிபுரியும் அரச அதிகாரிகளுக்கு போக்குவரத்து கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் - நாடாளும...
கையேந்தும் வாழ்வு நிலையில் இருந்து மாற்றம் காண ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வெற்றி அவசியம் - தம்பிலு...
ஊர்காவற்றுறையில் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்!
தமிழ் மொழியை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்றிவரும் ஒரே தலைவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே - வலிகாமம் வடக...
டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வேலணையில் தேர்தல் பரப்புரை கூட்டம் ஆரம்பம்!