எமது பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தரக்கூடியவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே : புன்னாலைக்கட்டுவன் மக்கள் நம்பிக்கை!

Monday, October 3rd, 2016

நாம் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது அவற்றைத் தீர்த்து வைப்பதில் என்றென்றும் எமக்கு உறுதுணையாக இருந்து தீர்வைப் பெற்றுத்தரக்கூடிய ஒரே தமிழ் அரசியல் தலைமையாக விளங்குபவர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மட்டுமே என புன்னாலைக்கட்டுவன் வடக்கு திடற்புலம் மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

புன்னாலைக்கட்டுவன் வடக்கு திடற்புலம் பகுதிக்கு இன்றைய தினம் (02) டக்ளஸ் தேவானந்தா விஜயம் மேற்கொண்டு மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்த போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

1969ஆம் ஆண்டு நாட்டின் முதல் பிரதமர் டட்லி சேனநாயக்கவின் பெயரில் குடியிருப்பு நிறுவி நாம் இங்கு குடியேற்றப்பட்டிருந்தோம். இந்நிலையில் நாம் வாழும் எமது பகுதியில் பயன்தரு மரக்கன்றுகளையும் நாட்டி அதனூடாகவும் பயன்களையும் பெற்று வருகின்றோம். இந்நிலையில் நூற்றுக்கு அதிகமான குடும்பங்கள் இங்கு வாழ்ந்துவரும் நிலையில் குடியிருப்புக்களுக்கு மத்தியில் உடலங்கள் தகனம் செய்யப்படுவதால் நாம் பல்வேறுபட்ட இடர்பாடுகளுக்கு முகங்கொடுக்க வேண்டிய துர்ப்பாக்கியம் ஏற்பட்டுள்ளது.

இதுவிடயம் தொடர்பாக நாம் பல தரப்பினரிடம் தெரியப்படுத்தியிருந்த போதிலும் அவர்கள் இதுவிடயத்தில் பாராமுகமாகவே இருந்து வருகின்றனர். இந்நிலையில்தான் எமது அவலத்தை நாம் டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் தெரியப்படுத்தியவுடன் நேரடியாக இங்கு வருகைதந்து எமது பிரச்சினைகள் குறித்து அதிக அக்கறையுடன் கவனம் செலுத்தியுள்ளமையானது எமக்கு மிகுந்த ஆறுதலைத் தருகின்றது.

இந்நிலையில் இங்கு மட்டுமல்ல மக்களாகிய நாம் அவலப்படும் போதெல்லாம் உரிய பகுதிகளுக்கு வருகைதந்து எமது குறை குற்றங்களைக் கேட்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளைப் பெற்றுத்தருபவர் டக்ளஸ் தேவானந்தா அவர்களே என்பதுடன் அவரால் மட்டுமே நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு உரிய வகையிலான தீர்வைப் பெற்றுத்தர முடியும் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதன்போது மக்களின் ஏனைய பிரச்சினைகள் தேவைப்பாடுகள் தொடர்பிலும் டக்ளஸ் தேவானந்தா கேட்டறிந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

DSCF2516


தமிழகத்திலுள்ள இலங்கை அகதிகள் நலன் காக்க உடனடி நடவடிக்கைகள் தேவை! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா...
வடக்கு கிழக்கிலுள்ள மாற்றுத்திறனாளிகளது வாழ்வியல் பாரபட்சமின்றி மேம்படுத்தப்பட வேண்டும் - நாடாளுமன்ற...
'எழுக தமிழ்' கூட்டுப்பேரணியை வெற்றிபெறச் செய்வோம். மக்களே அணிதிரண்டு வாரீர்! அலை கடலென வாரீர்!! ஈழ...
நீதி கேட்டு போராடும் துணிச்சலை எமது மக்கள் மனதில் விதைத்தவர்கள் நாங்கள் - நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.ப...
எதிர்காலத்தை வெற்றி கொள்ள கிடைக்கும் சந்தர்ப்பங்களுக்கு பங்காளிகளாக இருப்பது அவசியம் - பலாலியில் டக்...