எமது கலாசார விழுமியங்களை மென்மேலும் வளர்த்தெடுக்க என்றும் துணை நிற்பேன் – கலைஞர் கௌரவிப்பு நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, September 11th, 2016

குபேரகா கலைக் கழகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட கலைவிழாவில் பிரதம விருந்தினராக பங்கெடுத்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலைஞர்களுக்கு பதக்கம் அணிவித்தும் நினைவுக் கேடயங்கள் வழங்கியும் கௌரவித்தார்.

உடுவில் மான்ஸ் மகா வித்தியாலய மைதானத்தில் உடுவில் தெற்கு குபேரகா கலைக் கழகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கலைவிழாவில் இன்றைய தினம் (11) கலந்து கொண்டு சிறப்பித்தார்.

முன்பதாக வரவேற்புரையினை யூதராஜா வழங்கியதைத் தொடர்ந்து நிகழ்வுக்கான தலைமையுரையினை ரவிசங்கர் நிகழ்த்தினார்.

01

இந்நிகழ்வின் போது சமூக மாற்றத்திற்கும் ஏற்றத்திற்கும் பல்வேறு துறைகளில் பங்காற்றிய மூத்த கலைஞர்கள் உள்ளிட்ட 50 கலைஞர்கள்; பதக்கம் அணிவிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

அத்துடன் உடுவில் மான்ஸ் மகா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தாரதர சாதாரண தரத்தில் சித்தியெய்திய மாணவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

கிருபா லேணர்ஸின் அனுசரணையுடனும் னுனு தொலைக்காட்சியின் ஊடக அனுசரணையுடனும் நடைபெற்ற இக்கலைவிழாவில் பல்வேறு கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

1

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் குபேரகா கலைக்கழகத்திற்கு தமது வாழ்த்துக்களையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொண்ட அதேவேளை இவ்வாறான கலை நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அதற்கு கட்சி சார்ந்த ஒத்துழைப்பும் உதவியும் தொடர்ச்சியாக வழங்கத் தயாராக இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.

3

இதன்போது ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் உறுப்பினரும் வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவருமான சி.தவராசா,யாழ்  மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கிருஸ்ணாநந்தன் மாலினி, உடுவில் பிரதேச கலாசார உத்தியோகத்தர் ரஜினி நரேந்திரன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் வலி.தெற்கு பிரதேச நிர்வாகச் செயலாளர் வலன்ரைன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

DSCF1841

13

7

9

16

Related posts:

அசௌகரியங்களை எதிர்கொ ள்ளும் மக்களுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுத்தரவேண்டும் - ஆளுநரிடம் டக்ளஸ் தேவ...
யாழ் மாவட்ட கூட்டுறவுச் சபை ஊழியர்கள் தமது எதிர்காலம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஆராய்...
ஐ.தே.மு - கூட்டமைப்பு கூட்டாட்சியில் யாழ்ப்பாணத்திற்கு அநீதி: விசாரணைக்கு அமைச்சரவையில் தீர்மானம் அம...

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நெல் காயவைக்கப் படுகிறது - டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!
அச்சுறுத்திவரும் சட்டவிரோத கடல் தொழில் துறை நடவடிக்கைகள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்படும் - டக்ளஸ் ...
யாழ் மாவட்ட கூட்டுறவுச் சபை ஊழியர்கள் தமது எதிர்காலம் தொடர்பில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுடன் ஆராய்...