எமது கட்சி மீதான மக்களின் நம்பிக்கையை நிச்சயம் பாதுகாப்போம் – டக்ளஸ் தேவானந்தா

22449575_1554605007911914_1490948045_o Thursday, October 12th, 2017

சமூக அபிவிருத்தியுடன் கூடியதான கட்டமைப்புக்களை நிறுவி அவற்றினூடாக சமூகத்தை வளர்ச்சிகாணச் செய்வதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் –

யுத்தம் முடிவடைந்து மக்கள் இயல்பு வாழ்வுக்கு திரும்பிவரும் நிலையிலும் தீர்க்கப்படாத பிரச்சினைகள் இன்றும் காணப்படுகின்றன. அத்தேவைகளில் அடிப்படைத்தேவைகள் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளாகவும் காணப்படுகின்றன.

அந்தவகையில் இனங்காணப்படும் எமது மக்களின் பிரச்சினைகளுக்கும் தேவைப்பாடுகளுக்கும் வேறுபாடுகளுக்கு அப்பால் தீர்வுகள் காணப்படவேண்டும் என்பதே எமது கட்சியின் நிலைப்பாடாகும்.

அந்தவகையிலேயே கிராமங்கள்தோறும் வட்டார ரீதியாக நிர்வாகக் கட்டமைப்புக்களை உருவாக்கி மக்களின் பிரச்சினைகளை இனங்கண்டுகொள்வது மட்டுமன்றி அவற்றுக்கான தீர்வுகளையும் பெற்றுக்கொடுப்பதற்கு முயற்சிகளை முன்னெடுத்துவருகின்றோம்.

எமது கட்சி மீது மக்களுக்கு இருக்கின்ற நம்பிக்கையை நாம் நிச்சயம் பாதுகாப்போம். கடந்தகாலங்களில் எமது கட்சி மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக சுயலாப அரசியல்வாதிகள் அவதூறுகளையும் சேறுபூசல்களையும் தொடர்ச்சியாக முன்வைத்து வந்தனர்.

அனால் நீதிமன்ற விசாரணைகளுக்கூடாக அவற்றின் உண்மைகள் தற்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன என்பதையும் இந்த வேளையில் சுட்டிக்காட்டவிரும்பகிறேன். எனவே கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை மக்களுக்கு பயனுள்ள வகையில் கட்சியை நிலைநிறுத்தி அதனூடாக மக்களுக்கான சேவைகளையாற்றுவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து உழைக்கவேண்டும் எனவும் டக்ளஸ் தேவானந்தா இதன்போது வலியுறுத்தினார்..

கட்சியின் வடமாகாண நிர்வாக செயலாளர்கள் மற்றும் யாழ் மாவட்ட பொதுச்சபை உறுப்பினர்களுடனான விஷேட சந்திப்பின்பொன்று இன்றையதினம் யாழ்ப்பாணம் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


வன்னேரிக்குளம் பகுதியில் நெற் களஞ்சியசாலை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க முடியுமா? - நாடாளுமன்றில் டக...
இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுக்கள் மாகாண மட்டத்திலும் விஸ்தரிக்கப்பட வேண்டும் -டக்ளஸ் தேவானந்தா
நீண்டகால யுத்தம், தவறான அரசியல் வழிநடத்தல் தமிழ் சமூகத்தை சீரழித்துள்ளது - சர்வமத பிரதிநிதிகள் சந்தி...
அதிகாரப் பகிர்விற்கு மாகாணசபை முறைமையை ஓர் ஆரம்பமாகக் கொண்டு  படிப்படியாக முன்னோக்கி நகருங்கள் - செய...
நினைவேந்தல் நிகழ்வை பொது அமைப்பு நடத்துவதே பொருத்தமாக இருக்கும்- -செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!