எமது கட்சியின் அரசியல் வழிமுறைப்பாதையே சரியானதென வரலாறு நிரூபித்துள்ளது – டக்ளஸ் தேவானந்தா

Sunday, August 28th, 2016

எமது அரசியல் பாதையை நாம் சரியாகவே வழிநடத்திச் சென்றிருக்கின்றோம். அதுவே இன்று நிதர்சனமாகியுள்ளது. அந்த வகையில் எமது கட்சி தனது இறுதி இலட்சியத்துடனான இலக்கை நிச்சயம் சென்றடையும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம் (28) கட்சியின் யாழ் தலைமையகத்தில் யாழ் மாவட்ட பிரதேச செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுச்சபை உறுப்பினர்களின் ஒரு பகுதியினருடனான கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் உரையாற்றுகையில் –

ஆரம்ப காலம்தொட்டு எமது கட்சி மக்களுக்காக அயராது உழைத்து வந்திருக்கின்றது இதனூடாக எமது மக்களுக்காக நாம் ஆற்றிய பெரும் பணிகளை யாவரும் நன்கு அறிவர்.  இதனால் எமது கட்சி மீதான ஈர்ப்பு மக்களை வருட மக்கள் எமது கட்சியைநோக்கி அணிதிரளத் தொடங்கினர். இதனைப் பொறுக்க முடியாத ஏனைய அமைப்புகளும் தமிழ் அரசியல் கட்சிகளும் எம்மீது சேறு பூசி அவதூறானதும் பொய்யானதுமான பிரசாரங்களை திட்டமிட்ட வகையில் முன்னெடுத்து எமக்கு களங்கத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்

DSC05094

இவ்விதமான பல்வேறுபட்ட இடர்பாடுகளையும் துன்பங்களையும் கடந்து நாம் மக்களுக்கான பணிகளையும் சேவைகளையும் அர்ப்பணிப்புடனும் விடாமுயற்சியுடனுடம் மேற்கொண்டு வருகின்றோம். குறிப்பாக கடந்த காலங்களில் அரசாங்கங்களுடன் எமது மக்கள் நலன் சார்ந்த ஒரு வேலைத்திட்டத்துடன் எமது இணக்க அரசியலை மதிநுட்ப சிந்தனையுடன் முன்னகர்த்தி அதனூடாகவே மக்களிற்கான வரலாற்று பணிகளை செய்துள்ளோம் என்பதை இன்று வரலாறு சாட்சியாக பகிர்கின்றது.

நாம் முன்னெடுத்த அரசியலையே தற்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பின்பற்றி வருகின்றர். குறிப்பாக நாம் எமது இணக்க அரசியல் மூலமாக மக்களது பிரச்சினைகளையும் தேவைகளையும் முன்னிறுத்தி அவற்றிற்கான தீர்வுகளுக்காகவே சேவைகளை மேற்கொண்டு வந்திருந்தோம். எமது அரசியல் பலத்திற்கேற்ற வகையில் வெற்றிகளையும் ஈட்டிக் கொடுத்திருக்கின்றோம்.  ஆனாலும் போதிய அரசியல் பலத்துடன் இருக்கும் கூட்டமைப்பினர் மக்களது பிரச்சினைகளளை தீரா பிரச்சினையாக மாற்றி அதனூடாக தமது வாக்கு வங்கிகளை நிரப்பி மத்தியில் இணக்க அரசியலை தற்போது நடத்துவதாக கூறுகின்றனர்.

ஆனால் பதவிகளையும் அதிகாரங்களையும் பெற்றுக்கொண்ட கூட்டமைப்பினர் தமிழ் மக்களை ஏமாற்றும் சுயநல அரசியலை முன்னெடுத்து வருகின்றனரே தவிர அதனூடாக மக்களுக்கான எந்தவொரு தீர்வுகளையும் பெற்றுக்கொடுக்கவில்லை.

DSC05084

எமது கட்சியின் வெளிப்படையான ஜனநாயகப் பாதையே இன்று நிதர்சனமாக மலர்ந்துள்ளது. இதன் வழியிலேயே எமது கட்சி எடுத்துக்கொண்ட இறுதி இலட்சியத்தை அடையும்வரை மதிநுட்ப பாதையில் பயணிப்போம். அதனூடாக எமது மக்களுக்கு நிரந்தரமான ஒரு ஒளிமயமான வாழ்வை பெற்றுக்கொடுக்க நாம் தொடர்ந்தும் அர்ப்பணிப்போடு உழைக்க தயாராக இருக்கின்றோம். இந்த வகையில் கட்சிக் கட்டமைப்புக்களை பிரதேசங்களிலுள்ள வட்டார ரீதியாக விரிவுபடுத்தி எமது கட்சியின் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான வேலைத்திட்டங்களை முன்னெடுத்துள்ளோம். இதனூடாக நாம் அனைவரும் அயராது பாடுபட்டு எமது மக்களின் விடியலை நோக்கி உழைக்க தயாராகுவோம் எனத் தெரிவித்தார்.

முன்னதாக நிகழ்வின் ஆரம்பத்தில் தாயக விடுதலைப் போராட்டத்தில் தம் உயிர்களை ஈந்;த அனைத்து போராளிகளுக்கும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தோழர்களுக்கும் பொதுமக்களுக்கும் சில நிமிடமௌன வணக்கத்துடன் கூட்டம் ஆரம்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:

இரு மொழிகள் அமுலாக்கம் எழுத்து மூல ஆவணமாக இருக்கின்றதே அன்றி அரச செயற்பாட்டு வடிவத்தினைப் பெற இன்னும...
சமூக சேவையாளர்களுக்கான விருதுகளை வழங்கி கௌரவித்தார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!
கடற்றொழில் மற்றும் நன்னீர் வாழ்வாதார அபிவிருத்திக்கும் தீவகத்தின் குடிநீர் பிரச்சினைக்கும் உதவுங்கள்...