எமது அரசியல் கொள்கைக்குள் பிரிவினைக்கு இடமில்லை – டக்ளஸ் தேவானந்தா எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, July 18th, 2018

சாத்தியமற்றவை என எவை எல்லாம் தெரிகின்றனவோ, அவற்றின் பின்னால் ஓடிக் கொண்டு, அடுத்த தேர்தல் வரை காலத்தைக் கடத்துவதே சில தமிழ் அரசியல் வாதிகளின் கொள்கையாக இருக்கின்ற நிலையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழுகின்ற மக்களது பொருளாதார வீழ்ச்சி நிலை தொடர்பில் நான் தொடர்ந்தும் குரல் எழுப்பி வருகின்றேன். எனது இந்தக் குரலானது வடக்கு, கிழக்கு மாகாண மக்களினதும், இந்த நாட்டின் அனைத்து மக்களினதுமான குரலாக ஒலிப்பதற்குக் காரணம்,  நாம் கொண்டுள்ள அரசியல் கொள்கையில் எவ்விதமான பிரிவினைகளுக்கும் இடமில்லை என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி திருத்தச் சட்டமூலம், காணி பாரதீனப்படுத்தல் மீதான கட்டுப்பாடுகள் திருத்தச் சட்டமூலம் தொடர்பாக நாடாளுமன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஆனால், ஒரு சிலர் – தமிழ்த் தரப்பிலாகட்டும், சிங்களத் தரப்பிலாகட்டும் – தங்களது சுயலாப அரசியல் கருதிய இனவாதப் பேச்சுகளால் இந்த நாட்டில் இனங்களுக்கு இடையிலான பிரிவினையை மேலும் விரிவடையச் செய்து, எமது மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கக்கூடிய வாய்ப்புகளை இழக்கச் செய்து வருகின்றனர்.

‘புலிகள் காலத்தில் தமிழ் மக்கள் பாதுகாப்பாக இருந்தனர்’ என இன்று தங்களது சுயலாப அரசியலுக்காகக் கூறுகின்ற இந்த அரசியல்வாதிகள,; புலிகள் இருந்த காலத்தில் யாருடைய பாதுகாப்பில் எங்கெல்லாம் இருந்தனர்? எனக் கேட்க விரும்புகின்றேன்.

புலிகள் காலத்திலிருந்து, யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர்வரையில் அரச பாதுகாப்புடன் கொழும்பிலும், இந்தியாவிலும், பிற நாடுகளிலும் இவர்கள் இருந்ததை மறந்து விட்டார்களா? எனக் கேட்க விரும்புகின்றேன். வடக்கு, கிழக்குப் பக்கமே தலைவைத்தும் படுக்காமல் இவர்கள் அக் காலகட்டத்தில் இவ்வாறு இருக்கவில்லையா? எனக் கேட்க விரும்புகின்றேன் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்

Related posts:

போக்குவரத்து விதிகள் தொடர்பில் ஒரு நிலையான நிலைப்பாடு எட்டப்படுவது அவசியமாகும் - டக்ளஸ் தேவானந்தா வல...
முற்றுகைக்குள் சிக்கியிருந்த வடக்கு மாகாணசபை உறுப்பினர்களை சிறை மீட்டெடுத்தார் டக்ளஸ் தேவானந்தா!
காணாமல் போன வாழைச்சேனை கடற்றொழிலாளர்கள் நான்கு வாரங்களின் பின்னர் மீட்பு - அமைச்சர் டக்ளஸின் முயற்ச...

வன்னேரிக்குளம் பகுதியில் நெற் களஞ்சியசாலை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க முடியுமா? - நாடாளுமன்றில் டக...
விலைவாசி அதிகரிப்பு: வடக்கு, கிழக்கில் வாழும் மக்கள் படுகின்ற துயரங்கள் குறித்து கூறுவதற்கு வார்த்தை...
திக்கம் வடிசாலையை வருமானம் ஈட்டும் தொழிற்சாலையாக மாற்ற வேண்டும் – அதிகாரிகளுடனான கூட்டத்தில் அமைச்சர...