எமக்கு கிடைக்கும் அரசியல் பலமே தமிழ் மக்களது தலைவிதியை மாற்றி எழுதும் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, November 15th, 2016

எமது கட்சியின் அற்பணிப்பகளும் அதனூடான மக்களுடனான பிணைப்புகளும் இன்று பன்மடங்கு அதிகரித்துள்ளதானது எமது கட்சி கடந்தாகாலத்தில் செய்த மக்கள் பணிகளுக்கு கிடைத்த வெற்றியாகவே இது அமைந்துள்ளது எனவும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

தமிழ் மக்களுக்காக நாம் எதை முன்னெடுத்து சென்றாலும் அது உண்மைத் தன்மையானதாகவும் வெளிப்படையானதாகவும் இருந்து வந்துள்ளதை வரலாறு இன்று பதிவிட்டுள்ளது. ஆனால் போலித் தமிழ் தேசியம் பேசும் இதர தமிழ் அரசியல் தலைமைகளுக்கு அது கசப்பானதாக அமைந்தது.

இதன் காரணமாகவே எமது கட்சி கடந்த காலங்களில் மக்களது நலன்சார்ந்த எத்தகைய செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்றாலும் அவற்றையெல்லாம் தமது குறுகிய அரசியல் சுயநலன்களுக்காக திசைதிருப்பி எம்மீது அபாண்டமான பழிகளை சுமத்தி தமிழ் மக்களுக்கு கிடைக்கவேண்டிய அரசியல் உரிமைகளையும் தேவைப்பாடுகளையும் கிடைக்கப்பெறாது செய்து மக்களை வெறுவிலிகளாக்கியது.

தற்போது எமது கட்சி வட்டார முறைமையூடான செயற்பாடுகளை முன்னகர்த்தி செல்வதனால் எமது செயற்பாடுகளும் பணிகளும் குக்கிராமங்கள் தொடக்கம் மாநகரங்கள் வரை வாழும் மக்களிடம் பெரும் எழுச்சியுடன் முன்னெடுத்தச்செல்லப்பட்டு வெற்றிகண்டுள்ளது.

அனைத்தும் வென்றெடுக்கப்படும் என்று உணர்ச்சி பொங்க தமிழ் மக்களிடம் கூறி காலாகாலமாக மக்களை ஏமாற்றிய போலித் தமிழ் தேசியவாதிகளது சுயநலங்கள் தற்போது மக்களின் முன்னால் கிழிக்கப்பட்டவிட்டது. அதுமட்டுமல்லாது எம்மீது இதர தமிழ் தரப்புகளால் தமது அரசியல் சுகவாழ்வுக்காக கூறிவரப்பட்ட வசைபாடல்களும் இன்று மக்கள் முன் வெளிச்சத்தக்கு வந்துள்ளது. இதனூடாக எமது கட்சி இன்றுவரை செய்துவந்த மதிநுட்ப இணக்க அரசியல்தான் உண்மையானதும் மக்களது நலன்சார்ந்த அரசியல் நகர்வு என்றும் மக்களிடம் காலம் உணர்த்தியுள்ளது.

யார் எம்மீது காழ்ப்புணர்வுகளையும் துரோகத்தனங்களையும் திட்டமிட்டு பூச முற்பட்டாலும் அவை அனைத்தையும் அவர்கள் மீதே மீண்டும் வரலாறு பூசியிருக்கின்றது. எனவே எமது இலட்சியப் பயணத்தின் பாதையில் எம்மீதான  அர்த்தமற்ற அவதூறுகள் யாவும் தெருவில் கிடக்கும் முட்களை போன்றதே. அவைகளை தூக்கி எறிந்து நாம் எடுத்தக்கொண்ட இலக்கை அடையும்வரை பயணிப்போம் இவ்வாறு தெரிவித்திருக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நாம் பலமான சக்திகள் என்பதையும் எமக்கு கிடைக்கும் அரசியல் பலத்தினூடாகவே தமிழ் மக்களது தலைவிதி மாற்றியெழுதப்படும் என்றும் தெரிவித்தார்.

15.11

 

Related posts:

வடக்கிலுள்ள மருத்துவமனைகளுக்கு போதிய மருத்துவர்கள் இல்லாத நிலையே தொடர்ந்தும் காணப்படுகின்றது – நாடாள...
தமிழ் மக்களின் வாழ்க்கையை அடியோடு சிதைத்த தமிழ்த் தரப்பு இன்று ‘கம்பெரலியவுடன்’ புரண்டு கிடக்கிறது -...
அமைச்சர் டக்ளஸ் அறிவுறுத்து - வடக்குக் கடலில் கடலுயிரினங்களின் இனபெருக்கத்தினை அதிகரிப்பதற்கு நடவடி...