எமக்கான தீர்வுகளை பெற்றுத்தரும் வல்லமை உங்களிடமே உள்ளது : டக்ளஸ் தேவானந்தாவிடம் நாவாந்துறை மக்கள் சுட்டிக்காட்டு

Monday, July 31st, 2017

சமுர்த்தித்திட்டத்தை யாழ்ப்பாணத்திற்கு கொண்டுவந்து எமது வறுமை நிலையை மாற்றியமைத்த தங்களுக்கு நாங்கள் என்றும் நன்றிக்கடன்பட்டவர்களாகவே இருக்கின்றோம். அந்தவகையில் சமுர்த்திப் பயனாளிகளாகிய நாம் தற்போது எதிர்கொண்டுள்ள பிரச்சினைக்கும் உரிய தீர்வை பெற்றுத்தரவேண்டிய பொறுப்பையும் தங்களிடம் வேண்டி நிற்கின்றோம் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவிடம் நாவாந்துறைப் பகுதியைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட சமுர்த்திப் பயனாளிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

கட்சியின் யாழ்ப்பாணம் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் (31) நடைபெற்ற சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு விடுத்தனர்.

வடக்கைத் தவிர்ந்த நாட்டின் ஏனைய பகுதிகளில் சமுர்த்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் வடபகுதி மக்களாகிய நாம் பாரிய இன்னல்களையும் அவலங்களை சந்தித்திருந்தோம். அக்காலப்பகுதியில் அப்போதைய ஜனாதிபதி சந்திரிக்காவிடம் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் சமுர்த்திப் பயனாளிகள் வட பகுதியிலும் உள்வாங்கப்படவேண்டும் என்று டக்ளஸ் தேவானந்தா எடுத்த முயற்சியின் பயனாக சமுர்த்தி பயனாளிகளாக நாம் உள்வாங்கப்பட்டிருந்தோம்.

வறுமைகோட்டின்கீழ் வாழும் எமது குடும்பங்களுக்கு இந்த சமுர்த்தித்திட்டமானது பாரிய உதவியாக அமைந்திருந்தது. இதன்காரணமாக நாம் வாழ்விலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதான ஒரு சூழல் நிலவியிருந்த காலப்பகுதியில் எமக்கு வழங்கப்பட்டுவந்த சமுர்த்தி உதவித் திட்டம் தற்போது நிறுதப்பட்டுள்ளது.

இதனால் நமது குடும்பங்கள் தற்போது பாரிய நெருக்கடிகளுக்கும் இடர்பாடுகளுக்கும் முகங்கொடுக்கவேண்டியதான சூழலும் உருவாகியுள்ளது.

எனவே எமது நிலையை கருத்திற்கொண்டு நிறுத்தப்பட்டுள்ள சமுர்த்தி உதவித்திட்டங்களை மீண்டும் எமக்கு கிடைக்க வழிவனை செய்யவேண்டுமென டக்ளஸ் தேவானந்தாவிடம் மக்கள் கோரிக்கையினை முன்வைத்திருந்தனர்.

மக்களின் கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்திய செயலாளர் நாயகம் துறைசார்ந்த அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி அதற்பான தீர்வுகளை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.

இதன்போது யாழ் மாநகர முன்னாள் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா மற்றும் யாழ்ப்பாணபிரதேச நிர்வாக செயலாளர் றீகன் ஆகியோர் உடனிருந்தனர்


வடக்கின் கல்விநிலை வீழ்ச்சிகண்டு செல்வது வேதனைக்குரியது - டக்ளஸ் தேவானந்தா!
ஆழிப் பேரலை அனர்த்த தினத்தை அனைவரும் நினைவு கூருவோம்- செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!
நித்திய உறக்கத்தில் ஆழ்ந்து விட்ட கலைஞரின் துயரத்தில் நாமும் பங்கெடுக்கின்றோம் - டக்ளஸ் எம்.பி. அஞ்ச...
மன்னார் மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பில் உண்மைகளும் தோண்டி எடுக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்...
பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு தீர்வு கிட்டும் - பல்கலைக்கழக நியமனத்தில் உள்ளீர்க்கப்படாத உழியர்களிடம...