எனது பெயரால் அநாமதேய செய்தி: கண்டிக்கத்தக்கது என்கிறார் டக்ளஸ் தேவானந்தா !

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நாம் ஆதரவளித்த ஜனாதிபதி வேட்பாளர் கோட்டபய ராஜபக்ச வெற்றியீட்டியுள்ளார். அவரது வெற்றிக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இம்முறை நடைபெறும் தேர்தலில் கோட்டபய ராஜபக்ச அவர்களே வெற்றி பெறுவார் என்றும் அவரது வெற்றியில் பங்கெடுக்க வேண்டும் என்றும் எமது மக்களிடம் நாம் கேட்டுவந்திருக்கின்றோம். அதை ஏற்றுக்கொண்டு வாக்களித்துள்ள எமது மக்களுக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதேவேளை போதிய தெளிவில்லாமலும் இன்ன பல காரணங்களுக்காகவும் தமது வாக்குகளை சரியான வகையில் பிரயோகிக்காதவர்களின் நிலைப்பாட்டை நாம் புரிந்துகொள்கின்றோம்.
அந்தவகையில் எமக்கு முன்னால் மீண்டும் திறக்கப்பட்டிருக்கும் புதிய பாதையில் தமிழ் மக்களை கௌரவத்தோடும் அச்சமின்றியும் வழிநடத்திச் செல்லுகின்ற பொறுப்பை வரலாறு என் மீதே மீண்டும் சுமத்தியுள்ளது. அதை ஏற்று எமது மக்களுக்கான எமது பயணம் தொடரும். அதில் தமிழ் மக்களாகிய நீங்களும் பங்கெடுத்துக் கொள்வீர்கள் என்றும் பக்கபலமாக பயணிப்பீர்கள் என்றும் நம்புகின்றோம்.
நாம் காட்டி நிற்கும் திசையில் ஒவ்வொரு தனி மனிதனதும் பாதுகாப்பு சுய மரியாதை என்பன பாதுகாக்கப்பட்டே வந்திருக்கின்றது. நாம் காட்டிய பாதையில் ஒருபோதும் அழிவுகள் மனித அவலங்களுக்கு இடமிருக்கவில்லை. ஆகவே நாம் சரியான தீர்மானங்களையே எடுக்கின்றோம் என்பதும் மக்களுக்கு சரியான பாதையையே காட்டியுள்ளோம் என்பாதையும் வரலாறு நிரூபித்துள்ளது.
வெற்றியிலும் தோல்வியிலும் இருந்து பாடங்களையும் அனுபவங்களையும் பெற்றுக்கொண்டு முன்னொக்கிச் செல்வோம்
எனது பெயரால் வெளியாகும் அனாமதேய செய்திகள் விசமத்தனமான உள்நோக்கத்தடன் சிலரால் வெளியிடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்தாகும்.
ஆகவே கீழ்க்காணும் செய்தியை கட்சியின் செய்தியாக கருத வேண்டிய அவசியம் இல்லை. அனாமததேய செய்திகளுக்கும் எனக்கும் எதுவித தொடர்பும் கிடையாது. அவ்வாறான செய்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
அத்துடன் எனது கருத்துக்கள் அல்லது வழிகாட்டல்கள் எமது அதிகார பூர்வ இணையத்தளமான EPDPNEWS.COM என்னும் இணையத்தமூடாகவே முதலில் வெளியாகும் என்பதையும் தெரிவிதுள்ளார்.
வெளியான அநாமதேய செய்தி
மக்களை யாரும் குறை கூறாதீர்கள்…!
தோழர்களே நண்பர்களே மக்களை யாரு குறை கூற வேண்டாம் மக்கள் மனங்களை வெல்வது என்பது சாதாரண விடையம் அல்ல நம்மை மக்கள் புரிந்து கொள்ளும் காலம் வெகுதொலைவில் இல்லை ஆகவே மக்கள் உங்களை ஏற்றுக்கொள்ளும் அழவிற்கு உங்கள் பணிகளை தொடர்ந்து செயல் படுத்துங்கள் மக்கள் மனம் குளிரும் வரை உங்களால் முடிந்த உதவிகளை புரியுங்கள் பழியுணர்ச்சி மனதில் இருந்து புறம் தள்ளிவிட்டு மக்கள் அருகே சென்று அவர்களின் துன்பங்களில் தோள் கொடுத்து உதவுங்கள் அவர்களை உங்களை வாரியணைத்து கொள்வர் சிந்தித்து செயலாற்றுங்கள் உங்களின் சேவையை மக்களின் கரங்கள் உங்களை சேர்க்கும்………
Related posts:
|
|