எக் ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தின் பாதிப்பு குறித்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நாளை விசேட கலந்துரையாடல்!

Friday, June 11th, 2021

எக் ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான கலந்துரையாடல் ஒன்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நாளை 12 ஆம் திகதி சனிக்கிழமை காலை  9 மணியளவில் நீ்ர்கொழும்பு நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக கடற்றொழில் அமைச்சின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கலந்துரையாடலின்போது கப்பல் விபத்தின் காரணமாக கடற்றொழிலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளதாகவும் குறித்த ஊடகக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது  கடற்றொழில் இராஜாங்க அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நிமால் லன்ஷா ஆகியோருடன் பாதிக்கப்பட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்ளவுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

Related posts: